நடிகையிடம் அப்படி ஒரு கேள்வி கேட்ட பார்த்திபன்… சிக்கலில் சிக்கிய கமல்…
தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகர் கமலஹாசன். பெரும்பாலும் கமல்ஹாசன் பொது மேடைகளில் பேசுகிறார் என்றாலே அது அமர்ந்திருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தான் இருக்கும்.
ஏனெனில் பெரும்பாலும் கமல்ஹாசன் பேசும் விஷயங்களே பெரும்பாலும் மக்களுக்கு புரியாது. இப்படி இருக்கும் பொழுது கமல்ஹாசனே மைக்கை எடுக்க பயந்த சம்பவம் ஒன்று நடிகர் பார்த்திபனால் நடந்திருக்கிறது.
பார்த்திபன் செய்த வேலை:
உத்தம வில்லன் திரைப்படத்தின் விழா ஒன்று நடந்த பொழுது அந்த திரைப்படத்தின் நடிகை மேடையில் ஏறினார். அப்பொழுது அந்த நிகழ்ச்சியை பார்த்திபன்தான் தொகுத்து வழங்கி வந்தார். அந்த மேடையில் நடிகை வந்த பொழுது அவரிடம் பார்த்திபன் கமல்ஹாசன் எப்பொழுதும் உங்களிடம் உதட்டின் மூலமாக தான் பேசுவாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ஏனெனில் உத்தம வில்லன் திரைப்படத்தில் கதாநாயகிக்கும் கமலுக்கும் இடையே முத்த காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அதனை குறிப்பிடும் வகையில் தான் அதை கேட்டிருந்தார் பார்த்திபன் இதனால் அந்த விழாவில் பார்த்திபன் அழைத்தும் அப்போது மேடையில் கமல்ஹாசன் ஏறி பேசவே இல்லை.
இப்படியாக அந்த நிகழ்வில் கமல்ஹாசனையே பயப்பட வைத்துள்ளார் நடிகர் பார்த்திபன்.