சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாக இருந்த திரைப்படம் Padakkalam. ஒரு கல்லூரியை சுற்றி தான் இதன் கதை நடக்கிறது.
ஒரே கல்லூரியில் இருக்கும் ஜித்தின், ராம்சத், நகுல் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு மாணவர்களை அடிப்படையாகக் கொண்டுதான் படத்தின் கதை செல்கிறது.
இந்த படத்தின் கதைப்படி அந்த கல்லூரியில் இருக்கும் ரஞ்சித் என்கிற பேராசிரியர் செய்யும் விஷயங்கள் தான் கதையாக இருக்கிறது. ரஞ்சித் எப்பொழுதுமே கையில் ஒரு பை வைத்திருக்கிறார். அதில் ஒரு பெட்டி இருக்கிறது.
அந்த பெட்டியை வைத்து அவரால் மற்றவர்களின் உடலை கட்டுப்படுத்த முடிகிறது. ஏற்கனவே ஷாஜி என்கிற பேராசிரியரின் உடலை கட்டுப்படுத்தி ரஞ்சித் செய்யும் சில விஷயங்களை ஜித்தன் என்கிற மாணவன் பார்த்து விடுகிறான்.
இந்த நிலையில் அந்த பெட்டியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று ஜித்தின் முடிவு செய்கிறான். அதன் இறுதியாக ஒரு பிரச்சனை உருவாகிறது ஜித்தின், பேராசிரியர் ரஞ்சித் மற்றும் ஷாஜி மூவரின் உடல் ஆத்மாக்களும் வேறு உடல் விட்டு உடல் மாறுகிறது.
இதனால் அடுத்து இவர்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள் என்பதாக இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி ஆகவும் அதே சமயம் மர்மமாகவும் இந்த கதை செல்கிறது இதற்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.