அந்த இடத்தில் அடித்த பாண்டியராஜன்.. கடுப்பாகி நடிகை செய்த காரியம்… ஆடிப்போன படப்பிடிப்பு..!

Director Pandiyarajan is an important comedy director in Tamil cinema. This is what happened when he directed the film Aanbaavam

நடிகர் பாண்டியராஜன் காமெடி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன பிறகு தொடர்ந்து காமெடி நடிகராக வலம் வந்தவர் ஆவார். குள்ளமாக இருக்கும் நடிகர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது என்று சினிமாவில் ஒரு விதிமுறை இருந்து வந்தது.

அதனை உடைத்து கதாநாயகன் ஆவதற்கு உருவம் ஒரு முக்கிய தேவை கிடையாது என்று நிரூபித்தார் நடிகர் பாண்டியராஜன். பாண்டியராஜன் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் கன்னி ராசி. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ஆண்பாவம்.

actress seetha
actress seetha

பாண்டியராஜனின் அனுபவம்:

ஆண்பாவம் திரைப்படம் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது ஆண் பாவம் திரைப்படத்தில் பாண்டியராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில்தான் சீதாவை கதாநாயகியாக அறிமுகம் செய்தார் பாண்டியராஜன்.

அப்பொழுது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு காட்சியில் சீதா ஒழுங்காக நடிக்கவில்லை என்று கோபப்பட்ட பாண்டியராஜன் அவரை கன்னத்தில் அடித்துவிட்டார். இதனால் கோபமான சீதா உடனே அவரது வீட்டிற்கு சென்று விட்டாராம்.

இதனால் படப்பிடிப்பே நின்றுவிட்டதாம் மேலும் சீதாவின் வீட்டிலிருந்து போன் செய்து அவர் நடிக்க வரமாட்டார் என்று கூறிவிட்டார்கள் பிறகு அவர்களது வீட்டிற்கு சென்று சீதாவை சமாதானப்படுத்தி படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் பாண்டியராஜன்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version