தமிழ் சினிமாவில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர்களில் மிக முக்கியமான நபர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் படங்களை பொருத்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக கதாநாயகனின் கதாபாத்திரம் இருப்பதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர் பார்த்து வியந்த படங்கள் குறித்து அடிக்கடி பேட்டிகளில் கூறுவது உண்டு. அப்படியாக இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான ஆண்பாவம் திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் விஜய் சேதுபதி கூறும் பொழுது ஆண்பாவம் திரைப்படத்தில் பெண்பார்க்கும் காட்சி ஒன்று வரும். அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி முதலில் நடிகர் பாண்டியன் அவரது உயரத்தை சுவற்றில் நின்று அளந்து விட்டு செல்வார்.
அதற்குப் பிறகு சீதா வந்து அளக்கும் பொழுது அவரது காலை எக்கி நிற்பது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டு இருக்கும். மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது என்பதை வசனத்தின் வழியாக சொல்லாமல் ஒரு காட்சியிலேயே காட்டிவிடுவார் பாண்டியராஜன். எப்படி அவ்வளவு எளிமையாக ஒரு காதலை அவரால் காட்ட முடிந்தது என்று அவரிடம் நான் பலமுறை கேட்டிருக்கிறேன் என்று அந்த காட்சி குறித்து பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.
இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து பிறகு இயக்குனராக மாறியவர் பார்த்திபன். பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்த காலம் முதலே அவர் சீதாவை காதலித்து வந்தார். பிறகு சீதாவும் பார்த்திபனை காதலித்தார்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பல வருடம் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு இருவருமே பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்கள் பிரிவிற்கான காரணத்தை பார்த்திபன் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது சீதா என் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தார். அதுதான் எங்கள் பிரிவிற்கு காரணம் என கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சீதா மனைவி கணவன் மீது எதிர்பார்ப்பு வைப்பது சாதாரண விஷயம்.
எனவே அதனால் எல்லாம் எங்களுக்குள் பிரிவு ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
Director Pandiyarajan is an important comedy director in Tamil cinema. This is what happened when he directed the film Aanbaavam
நடிகர் பாண்டியராஜன் காமெடி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன பிறகு தொடர்ந்து காமெடி நடிகராக வலம் வந்தவர் ஆவார். குள்ளமாக இருக்கும் நடிகர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது என்று சினிமாவில் ஒரு விதிமுறை இருந்து வந்தது.
அதனை உடைத்து கதாநாயகன் ஆவதற்கு உருவம் ஒரு முக்கிய தேவை கிடையாது என்று நிரூபித்தார் நடிகர் பாண்டியராஜன். பாண்டியராஜன் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் கன்னி ராசி. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ஆண்பாவம்.
actress seetha
பாண்டியராஜனின் அனுபவம்:
ஆண்பாவம் திரைப்படம் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது ஆண் பாவம் திரைப்படத்தில் பாண்டியராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில்தான் சீதாவை கதாநாயகியாக அறிமுகம் செய்தார் பாண்டியராஜன்.
அப்பொழுது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு காட்சியில் சீதா ஒழுங்காக நடிக்கவில்லை என்று கோபப்பட்ட பாண்டியராஜன் அவரை கன்னத்தில் அடித்துவிட்டார். இதனால் கோபமான சீதா உடனே அவரது வீட்டிற்கு சென்று விட்டாராம்.
இதனால் படப்பிடிப்பே நின்றுவிட்டதாம் மேலும் சீதாவின் வீட்டிலிருந்து போன் செய்து அவர் நடிக்க வரமாட்டார் என்று கூறிவிட்டார்கள் பிறகு அவர்களது வீட்டிற்கு சென்று சீதாவை சமாதானப்படுத்தி படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் பாண்டியராஜன்.
Actress Sita was popular in Tamil for a period of time. But she quit acting after her love marriage. After that, a celebrity shared her personal life experiences
தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே அதிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சீதா. நடிகை சீதாவிற்கு தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை காரணமாக பிறகு சினிமாவில் இருந்து விலகினார் நடிகை சீதா. இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரபல சினிமா விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
நடிகை சீதா:
அதில் அவர் கூறும் பொழுது சீதா வளர்ந்து வந்த காலகட்டத்தில் தான் அவர் பார்த்திபன் இயக்கிய புதிய பாதை திரைப்படத்தில் நடித்தார். அப்பொழுது இவருக்கும் பார்த்திபனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
actress seetha
ஆனால் சீதாவின் திருமணத்தில் அவர்களது வீட்டாருக்கு சுத்தமாக உடன்பாடே இல்லை. சினிமாவில் சீதா வளர்ந்து வரவேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் நடிகை சௌந்தர்யாவுடன் தொடர்பில் இருந்ததாக பேச்சுக்கள் இருந்தன.
இந்த விஷயத்தை அறிந்த சீதா மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானார் ஆனாலும் சில காலங்கள் அவர் பார்த்திபனுடன் சேர்ந்து வாழ்ந்தார் அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு தன்னுடைய மகளை சினிமாவில் நடிக்கும்படி கூறினார் சீதா. அந்த வகையில் சீதாவின் மகள் கன்னத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு சினிமாவில் தான் பட்ட கஷ்டங்களை கூறி அந்த படத்தில் நடிக்க வைத்தார் என்று இந்த விஷயங்களை பகிர்ந்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.
நமது சினிமாக்களில் பல இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் படத்தில் ஹீரோக்கள் செய்யும் சம்பவங்களை நிஜத்தில் அசால்ட்டாக செய்துள்ளனர். அப்படியாக நடிகரும் இயக்குனருமான பார்த்திபனும் கூட ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கிய திரைப்படம் மல்லுவேட்டி மைனர். இந்த படத்தில் கதாநாயகனாக சத்யராஜ் நடித்து வந்தார். கதாநாயகியாக சீதா நடித்தார். படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்தது.
படத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் ஒரு நாள் திடீரென படத்தின் கதாநாயகி சீதா படப்பிடிப்பிற்கு வரவில்லை. வெகு நேரம் காத்திருந்தும் கூட அவர் வருமாறு தெரியவில்லை.
எனவே இதுக்குறித்து அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது சீதாவின் குடும்பத்தினரும் சீதா எங்கு சென்றுள்ளார் என்று தெரியவில்லை என கூறிவிட்டனர். அப்போது சீதாவும் இயக்குனர் பார்த்திபனும் காதலித்து வந்தனர்.
பிறகுதான் தெரிந்தது இருவரும் ஓடி போய் திருமணம் செய்துக்கொண்டனர் என்பது, ஓடி போய் திருமணம் செய்ததால் சீதாவின் குடும்பத்தார் பிரச்சனை செய்யக்கூடும் என அவரை படப்பிடிப்பிற்கு அனுப்ப மறுத்துவிட்டார் பார்த்திபன். ஆனால் ஏற்கனவே பாதி படம் எடுக்கப்பட்டு விட்டதால் இப்போது கதாநாயகியையும் மாற்ற முடியாது அல்லவா?
எனவே அங்கு சென்ற படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் சீதாவிடம் நிலைமையை எடுத்துக்கூறி சீதாவிற்கு எந்த பாதிப்பும் வராது என பொறுப்பு ஏற்றுக்கொண்டு அந்த படத்தை எடுத்து முடித்துள்ளார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips