அண்ணாத்த சாதனையை முறியடித்த ஆண்டவர்! – ரொம்ப வெயிட் பண்றாங்க போல!

பிரபல தமிழ் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான “பத்தல.. பத்தல..” நேற்று வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி, பாடியும் உள்ளார்.

இந்த பாடல் வெளியாகி ஒருநாள் கூட முழுதாக ஆகாத நிலையில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.

முன்னதாக கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த” படத்தின் ஓபனிங் சாங் இன்று வரை 18 மில்லியன் பார்வையாளர்களுடன், 481K லைக்குகளையும் பெற்றிருக்கிறது. ஆனால் கமல்ஹாசனின் ”பத்தல பத்தல” பாடல் ஒரே நாளில் 714K லைக்குகளை குவித்து அண்ணாத்தவை பின்னுக்கு தள்ளியுள்ளது.