Tag Archives: Kamalhassan

பத்மினிக்கு கூட இந்தாளு இப்படி முத்தம் கொடுத்தது இல்ல..! –  சிவாஜி கணேசனை கலாய்த்த வாலி!..

சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர். நடிகர் திலகம் என அழைக்கப்பட்டவர்.  ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு ஒரு சிறப்பான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடித்த பல படங்கள் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தில் கமல், சிவாஜி இருவருமே சேர்ந்து நடித்திருந்தனர். இதனால் இந்த படத்திற்கு அப்போதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா சிவாஜியின் மிகப்பெரிய ரசிகராவார். எனவே அவர் இசையமைக்கும் பாடலில் சிவாஜியின் குரல் இடம் பெற வேண்டும் என ஆசைப்பட்டார் இளையராஜா. எனவே தேவர் மகன் படத்தின் ஒரு பாடலில் சிவாஜி பேசுவது போன்ற இடத்தை வைத்தனர்.

சிவாஜியும் அதற்காக பேசி கொடுத்தார். சிவாஜியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என வெகு நாட்களாக ஆசைப்பட்டார் இளையராஜா. எனவே அன்றைய தினம் போட்டோகிராபரை வரவழைத்து சிவாஜி கணேசன் அருகில் நின்று போட்டோ எடுத்தார் இளையராஜா.

அப்போது எதிர்பாராத விதமாக சிவாஜி இளையராஜா அருகில் வந்து அவரது கன்னத்தில் அன்பாக முத்தமிட்டார். அதுவே அப்படியே போட்டோவாக எடுக்கப்பட்டது. இது இளையராஜாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனவே அந்த போட்டோவை எடுத்துக்கொண்டு நேராக வாலியை சென்று பார்த்தார் இளையராஜா.

அவரிடம் இந்த போட்டோவை காட்டியுள்ளார். அதை பார்த்த வாலி “என்னய்யா இது இந்தாளு பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்துருக்க மாட்டாரு போலருக்கே” என கலாய்த்துள்ளார். இதை இளையராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விரைவில் உங்களை ஆள வருகிறான் ஆளவந்தான்! – கலைப்புலி தாணு அப்டேட்!

Aalavandhan Tamil Movie 2001

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001ல் வெளியான படம் ஆளவந்தான். இந்த படத்தில் ரவீணா தந்தோன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் வெளியான அந்த சமயத்தில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

அந்த சமயத்திலேயே சுமார் 400 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்திருந்தார் கலைப்புலி தாணு. தற்போது இந்த படம் விமர்சன அளவில் கமல் ரசிகர்களிடையேயும், உலக சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு திட்டமிட்டுள்ளார். அதற்காக படத்தை மீண்டும் ரீமாஸ்டரிங் செய்து, நவீன ஒலியமைப்பும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆளவ்ந்தான் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கலைப்புலி தாணு “விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்!” என்று பதிவிட்டுள்ளார். அதனால் படத்தில் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

விக்ரமன் மேல இவ்ளோ வன்மமா? வெளியே துரத்த நடக்கும் வேலை! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றுள்ள விக்ரமனை வெளியேற்றும் வகையில் போட்டியாளர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி தொடங்கி 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வார இறுதியில் ஒரு எலிமினேஷன் நடைபெற உள்ளது.

இந்த எலிமினேஷனுக்காக விக்ரமன், ஷிவின், குயின்சி என பலரது பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. சக போட்டியாளர்கள் நடுவே விக்ரமனை வெளியேற்றும் எண்ணம் அதிகமாக உள்ளது. போட்டியாளர்கள் குறித்த கருத்துகளில் விக்ரமன் மீது அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

அதுபோல சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நபர்களிலும் விக்ரமன் தான் முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் கதை சொல்லும் போட்டியில் மற்றவர்களை கதை சொல்ல விடாமல் விக்ரமன் அடிக்கடி சென்று பஸர் அமுக்கியதில் பலருக்கும் அவர் மேல் உடன்பாடு இல்லை என தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் விக்ரமன் கதை சொல்ல சென்றபோது அவர் தொடங்கும் முன்னாலேயே மூன்று பஸரையும் போட்டியாளர்கள் அழுத்தி அவரை கதை சொல்ல விடாமல் செய்துள்ளனர். இதனால் இந்த வாரம் விக்ரமன் தான் வெளியேற போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமிக்ஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்

ஒரு காலத்தில் தமிழகத்தில் காமிக்ஸ் என்னும் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. காமிக்ஸ்கள் பலவும் கமர்சியல் திரைப்படங்களுக்கு இணையான கதைக்களத்தை கொண்டு நகர்பவை. இப்போதும் கூட தமிழ்நாட்டில் காமிக்ஸ் விரும்பிகள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை காமிக்ஸ் மீது ஆர்வம் கொண்ட பல இயக்குனர்கள், அந்த காமிக்ஸ் கதையையோ அல்லது அதில் ஒரு கதாபாத்திரத்தையோ தனது திரைப்படங்களில் வைப்பது உண்டு. அப்படி தமிழில் வந்த காமிக்ஸ் தொடர்பான சில திரைப்படங்களையும் அவை எந்த காமிக்ஸ் கதையில் இருந்து வந்தது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

வெற்றி விழா – XIII

13 என்கிற காமிக்ஸானது உலக அளவில் பிரபலமானது ஆகும். இந்த காமிக்ஸின் கதைப்படி 13 என கையில் பச்சை குத்திய ஒரு இளைஞன் முதல் காட்சியிலேயே கடற்கரையில் ஒதுங்குவான். அவனுக்கு அவன் யாரென்றே தெரியாது. அவனது பெயர் என்ன என்பது கூட தெரியாது. இந்நிலையில் அவனை கொல்ல சில மர்மமான ஆட்கள் அடிக்கடி வருவார்கள். அவர்களது கையிலும் கூட ஒரு எண் பச்சை குத்தியிருக்கும். அவன் தன்னை யார் என கண்டறிவதே கதையாக இருக்கும்.

இதே கதையை அடிப்படையாக கொண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெற்றி விழா என்கிற திரைப்படம் வெளியானது.

ராட்சசன் 

ராட்சசன் திரைப்படத்தின் இயக்குனருக்கு காமிக்ஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. அவர் எடுத்த ராட்சசன் படத்திற்கு மார்ட்டின் மிஸ்டரி என்கிற காமிக்ஸ்க்கும் இடையே தொடர்பு உண்டு. மார்ட்டின் மிஸ்டரியில் ஒரு கதையில் ஒரு கதாபாத்திரம் இருக்கும். தனது மகனின் இறப்பிற்காக பழி வாங்க நினைக்கும் அப்பா ஒருவர் வில்லனாக இருப்பார்.

ஆனால் இறுதியில் பார்க்கும்போது பையனே அப்பா வேடத்தில் அனைத்தையும் செய்திருப்பான். சிறு வயதிலேயே முதுமையாக தோற்றம் ஏற்படும் வியாதி ஒன்று அவனுக்கு இருந்திருக்கும். அதை வைத்து தன்னை தனது தந்தையாக வெளிப்படுத்தியிருப்பான்.

இந்த கதாபாத்திரத்தை போலவே ராட்சசன் திரைப்படத்தில் வில்லனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

சாஹோ, யோகன் அத்தியாயம் ஒன்று

லார்கோ வின்ச் என்கிற காமிக்ஸ் மிகவும் பிரபலமானது இதில் பிரபல பணக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்படுவார். அவருக்கு அடுத்து வாரிசு இல்லை என உலகமே நினைத்துக்கொண்டிருக்கும். எனவே அவரது சொத்துக்களை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் காத்திருக்கும். இந்நிலையில் லார்கோ வின்ச் என்கிற கதாபாத்திரம் அவரது வாரிசாக வந்து நிற்கும்.

இந்த கதையை தழுவி யோகன் அத்தியாயம் ஒன்று என்கிற படத்தை 2012 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்க திட்டமிட்டிருந்தார். இதில் விஜய் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் ஏனோ அந்த கதை படமாக்கப்படவில்லை. அதன் பிறகு பாகுபலி பிரபாஸ் நடித்து அதே கதையை சாஹோ என்கிற பெயரில் படமாக்கினர்.

இரும்புக்கை மாயாவி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் கூட காமிக்ஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. காமிக்ஸில் இரும்புக்கை மாயாவி என்றொரு காமிக்ஸ் உண்டு. இதில் ஒரு கை மட்டும் இரும்பாக கொண்ட கதாநாயகன், அந்த கையால் மின்சாரத்தை தொட்டால் மறைந்துவிடுவான். மேலும் அந்த இரும்புக்கை மிகவும் வலிமையானதாக இருக்கும்.

இந்த கதாபாத்திரத்தை கொண்டு இரும்புக்கை மாயாவி என்கிற பெயரில் சூர்யாவை வைத்து ஒரு படமெடுக்க திட்டமிட்டிருந்தார் லோக்கி. ஆனால் அந்த படம் இப்போது வரை எடுக்கப்படவில்லை. ஆனால் அந்த கதாபாத்திரம் மீது லோகேஷ்க்கு இருந்த ஈர்ப்பு காரணமாக மாஸ்டர் படத்தில் இரும்புக்கை மாயாவியின் பலத்தை பவானி கொடுத்திருந்தார் லோக்கி.

இவை அனைத்தும் காமிக்ஸை அடிப்படையாக கொண்டு தமிழில் வந்த திரைப்படங்களாக உள்ளன.

அடுத்து மூன்று முக்கிய கதாநாயகர்களுடன் இணைகிறார் கமல்

விக்ரம் திரைப்படம் நடிகர் கமலுக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அதையடுத்து அவர் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் எண்டர்டெயின்மெண்டை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கு முன்பும் பல படங்களை கமல்ஹாசன் இயக்கியுள்ளார்.

ஆனால் விக்ரம் திரைப்படம் அளவுக்கு எந்த படமும் வசூல் சாதனை செய்யவில்லை. இதையடுத்து இனி சில கமர்ஷியல் திரைப்படங்களையும் தயாரித்தால் என்ன? என முடிவு செய்துள்ளார் கமல்.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் படம் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் உள்ள நிலையில் கமல் மேலும் சில நடிகர்களை கொண்டும் படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு, மற்றும் உதயநிதி ஆகிய கதாநாயகர்களை கொண்டு மூன்று தனி தனி திரைப்படங்களை கமல் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இனி கமல் தயாரிப்பில் பல படங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

அப்ப மொத்த படமும் பழைய கமல் பட ரெஃபரன்ஸா –  விக்ரம் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் வீடியோ

வெகு காலங்கள் கழித்து சினிமாவிற்கு வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் விக்ரம். ரஜினி நடித்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிக வசூலை கொடுத்த ஒரு திரைப்படமாக விக்ரம் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதன் அடுத்த பாகத்தில் நடிகர் கார்த்தியும் கமலோடு இணைவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தில் இவர்களுக்கு வில்லனாக நடிகர் சூர்யா களம் இறங்குகிறார். எனவே விக்ரம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்துக்கொண்டிருந்த போதே பலருக்கும் அந்த படம் குறித்து அதிக ஆவல் இருந்து வந்தது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ஒரு தீவிரமான கமல் ரசிகர் ஆவார். 

கமல் ரசிகரே கமலை வைத்து திரைப்படம் இயக்குகிறார் எனும்போது கண்டிப்பாக அது சிறப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

மேலும் அதில் கமலின் பழைய படங்கள் குறித்த ரெஃபரன்ஸ்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனெனில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு ரஜினி ரசிகர். அவர் பேட்ட திரைப்படத்தை இயக்கியபோது அதில் ரஜினிக்கு ஏராளமான ரெஃபரன்ஸ் வைத்திருந்தார்.

ஆனால் காட்சிக்கு காட்சி என பல காட்சிகளில் லேகேஷும் கூட கமலுக்கு ரெஃபரன்ஸ் காட்சிகள் வைத்துள்ளார் என தற்சமயம் தெரிந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுக்குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் விக்ரம் படத்தில் உள்ள பல காட்சிகள் எந்தெந்த கமல் படங்களில் இருந்து எடுக்கப்பட்டது என்று விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை பார்க்கும் பலரும் முரட்டு கமல் ரசிகராக இருந்திருப்பார் போல நம்ம லோகேஷ் என கூறி வருகின்றனர்.

விஜய் ஒரு நல்ல படமாவது நடிச்சா தேவலாம் – அதிர்ச்சி தகவல் அளித்த கமல்

தற்சமயம் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி நல்ல வசூல் சாதனையை அளித்துள்ளது. ஆனாலும் கட்சி தொடர்பான விஷயங்கள் காரணமாக தொடர்ந்து தன்னால் அதிக படங்கள் நடிகக் முடியாது என கமல் கூறி வருகிறார்.

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை ஒரு முக்கியமான நடிகராக கமலஹாசன் இருக்கிறார். தமிழில் சில கதாநாயகர்கள் மட்டுமே அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் நடிப்பவர்களாக உள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்டவராக, மாற்று திறனாளியாக, பிச்சைக்காரனாக என எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க கூடியவர்களாக இந்த நடிகர்கள் இருப்பார்கள். கமல்ஹாசனும் அப்படிப்பட்ட ஒரு நடிகராகத்தான் இருக்கிறார். 

தமிழில் மாற்று கதைகள் பலவற்றை கொண்டு வந்தவராக கமல்ஹாசன் இருப்பதால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்த நிலையில் கமல்ஹாசன்தான் இருக்கிறார். இவர் முன்னர் ஒரு பேட்டியில் நடிகர்களை பற்றி பேசும்போது அவரிடம் நடிகர் விஜய் திரைப்படங்களில் எந்த திரைப்படத்தை நல்ல திரைப்படம் என நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அப்போது கமல் “விஜய் நல்ல படம் நடிக்க வேண்டும் என நான் மிகவும் ஆசைப்படுகிறேன்” என கூறியுள்ளார். 

“அப்படியானால் விஜய் நல்ல படமே நடிக்கவில்லை என கூறுகிறீர்களா?” என நிபுணர் கேட்கிறார். அதற்கு கமல் “அனைத்து பெரிய கதாநாயகர்களுமே சிறப்பான நல்ல கதையை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அப்படி அவர்கள் நல்ல கதைகளாக நடிக்கும்போது நான் கண்டிப்பாக அதற்காக மகிழ்ச்சியடைவேன் எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.”

கமல் வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட திரைப்படங்களைதான் நல்ல படம் என கூறுகிறாரா? என்கிற கேள்வி இங்கு எழுகிறது.

இந்தியன் 2 கன்பார்ம் – அடுத்த பான் இந்தியா படத்திற்கு தயாராகிறது தமிழ்நாடு

உலக அளவில் இந்திய சினிமா என பார்க்கும்போது பெரும்பாலான மக்கள் பாலிவுட் சினிமாவையே மொத்த இந்தியாவிற்கான சினிமா துறையாக கருதுகின்றனர். அதற்கு ஏற்றாற் போல பாலிவுட் சினிமாவும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருந்தது. ஆனால் தற்சமயம் உலக அளவில் ஹிட் கொடுக்கும் படங்கள் தென்னிந்தியாவில் இருந்து அதிகமாக வர துவங்கியிருக்கின்றன.

கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் 1000 கோடி வசூல் சாதனை செய்ததோடு வெளிநாட்டு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டன. இந்த நிலையில் அடுத்த பான் இந்தியா படமாக கமல் நடித்து இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக படத்தின் வேலைகள் பாதியிலேயே நின்றது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசனும் விக்ரம் திரைப்படத்தை நடிக்க வந்துவிட்டதால் இந்தியன் 2 படம் வருமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

விக்ரம் திரைப்படம் வெளியான பிறகு இந்தியன் 2 படம் பற்றிய பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சூர்யா இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 திரைப்படத்திற்காக வெகுவாக காத்துக்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். அதே சமயம் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க போகிறார் என கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்தியன் 2 திரைப்படத்தை எப்படி இருந்தாலும் நாம் அடுத்து வருடத்தில் எதிர்ப்பார்க்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இனிமே இப்படிதான் இருப்பாரா உலக நாயகன் – கவலையில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஒரு நடிகராக பேசப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் ஒரு நடிகனால் அனைத்து வித கதாபாத்திரமும் நடிக்க முடிய வேண்டும் என்கிற வரையறையே ஒரு சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

அழுதல், சிரித்தல், கோபப்படுதல், பணக்காரன், பிச்சைக்காரன், போலீஸ், திருடன் என அனைத்து வகையிலும் நடிக்க கூடிய சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் இருந்தார். அவருக்கு அடுத்து

அப்படி ஒரு நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். கமல்ஹாசனும் சிவாஜி கணேசனை போலவே பல்வேறு புதிய கதாபாத்திரங்களில் நடித்து அதற்கென தனி புகழ் பெற்றவர்.

ஆளவந்தான், குணா, தசாவதாரம், உன்னை போல் ஒருவன், ஹே ராம் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அதிகப்பட்சம் இந்த மாதிரியான திரைப்படங்கள் காரணமாகவே அவருக்கு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது. இந்நிலையில் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் தற்சமயம் 600 கோடிகளை தாண்டி ஓடியுள்ளது.

இது முழுக்க முழுக்க கமல் பாணிக்கு எதிரான படம் என கூறப்படுகிறது. பொதுவாக ஒரு ஹீரோ 50 பேரை அடிப்பது போல் இருக்கும் தமிழ் சினிமாவில் மாறுப்பட்டவர் கமல் என்ற பெயர் இருந்தது. ஆனால் இந்த படம் வழக்கமான தமிழ் சினிமா மாதிரி உள்ளதால் இனி கமலும் இந்த மாதிரியான படங்களில்தான் நடிப்பாரோ என ரசிகர்கள் சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கமல் இப்போதும் புது வகையான திரைக்கதை கிடைத்தால் நடிக்க தயாராகவே இருப்பார் எனவும் ஒரு பக்கம் பேசப்படுகிறது.

சொன்ன உடனே அவருக்கு கண்ணுல தண்ணி வரும் –  கமலை புகழும் பிரபல இயக்குனர்கள்

தமிழ் திரை உலகில் பல வகையான நடிகர்கள் உள்ள போதும் கூட நடிப்பிற்கு என சில நடிகர்கள் மட்டுமே புகழப்படுகின்றனர். ஆண் நடிகர்களை பொறுத்தவரை வெகு காலமாக சிறந்த நடிகராக புகழப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். ஏனெனில் ஒரு நடிகனால் அனைத்து வித கதாபாத்திரமும் நடிக்க முடிய வேண்டும் என்கிற வரையறையே ஒரு சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

அழுதல், சிரித்தல், கோபப்படுதல், பணக்காரன், பிச்சைக்காரன், போலீஸ், திருடன் என அனைத்து வகையிலும் நடிக்க கூடிய சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் இருந்தார். அவருக்கு அடுத்து அப்படி ஒரு நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் பற்றி ஒரு பேட்டியில் பாரதி ராஜா பேசும்பொழுது ”சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் க்ளைமாக்ஸில் கமல் கண்ணிற்கு ஒரு க்ளோஸ் அப் ஷாட் வரும். அதில் நான் கமலிடம் உன் கண்ணில் கண்ணீர் வர வேண்டும். ஆனால் அது நான் சொல்லும் போதுதான் கண்ணில் இருந்து கீழே விழ வேண்டும் என்றேன். கமலும் அந்த காட்சியில் நான் சொல்லும் நேரத்தில் கண்ணீரை உதிர்த்து அசர வைத்தார்” என கூறியிருந்தார்.

அதே போல தற்சமயம் வெளியாகி ஓடி கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் போர் கண்ட சிங்கம் பாடலில் மடியில் தனது பேரனை வைத்துக்கொண்டு விக்ரம் கதாபாத்திரம் இருப்பார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும் என லோகேஷ் கூறியுள்ளார். உடனே கமல் தனது கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துள்ளார்.

எனவே இப்போதும் கூட நடிப்பிற்கு ஒரு இலக்கணமாக கமல் பார்க்கப்படுகிறார்.

மாஸ்டருக்கு டஃப் கொடுத்த விக்ரம் –  வந்த வேகத்தில் அசத்தும் ஆண்டவர்

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்கிற பெயரை எப்போதும் கமர்ஷியல் கதாநாயகர்களே பெற்று வந்தனர். நடிகர் கமல்ஹாசனும் கூட ஒரு கமர்ஷியல் கதாநாயகர்தான் என்றாலும் கூட தமிழ் சினிமாவில் யாரும் முயற்சி செய்யாத புது புது திரைக்கதைகளை முயற்சி செய்தவர் நடிகர் கமல்ஹாசன்.

அன்பே சிவம், குணா, ஆளவந்தான், உன்னை போல் ஒருவன் போன்ற திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளத்தில் நடிப்பவர்களை காட்டிலும், அதிக வசூல் தரும் நாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எனவே நடிகர் கமல்ஹாசனும் ஒரு கமர்ஷியல் நடிகராக இறங்கி நடித்த படம்தான் தற்சமயம் வெளிவந்த விக்ரம் திரைப்படம். இந்த படம் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பார்த்த அளவை விடவும் அதிக அளவிலான வெற்றியை கொடுத்துள்ளது.

இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டில் அதிக பங்குகளை கொண்ட படமாக மாஸ்டர் இருந்தது. இதன் பங்கு கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் இருந்தது. தற்சமயம் கமல்ஹாசனின் விக்ரம், மாஸ்டரை ப்ரேக் செய்துள்ளது.

விக்ரம் படத்திற்கு கமல் உங்களுக்கு என்ன கொடுத்தார்..? – அனிரூத் அளித்த சுவாரஸ்யமான பதில்

கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. 

 இந்த படத்தில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய வில்லனாக வருவதாக கூறியிருந்ததால் படத்திற்கு மக்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்ப்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருந்தது.

கமல் தயாரிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த படமாக விக்ரம் இருப்பதால், படத்தில் பணிப்புரிந்த பலருக்கும் அவர் பரிசுகளை வழங்கு வந்தார். அந்த வகையில் இயக்குனர், உதவி இயக்குனர்கள், மற்றும் நடிகர் சூர்யா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார் கமல்.

அனி

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஒரு பேட்டி நடந்தது. அந்த பேட்டியில் அனிரூத்திடம் படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதே! உங்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது? என கேட்கப்பட்டது. அதற்கு அனிரூத் விக்ரம் படம் எனக்கு அளித்ததே அவர் தந்த பரிசுதான் என கூறியுள்ளார்.