ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சியை நீக்கிய பிசாசு படக்குழு

தமிழ் சினிமாவிற்கு பாடகியாக வந்த ஆண்ட்ரியா பிறகு பல படங்களில் நடித்து தற்சமயம் நடிகை ஆகி உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார் ஆண்ட்ரியா. 

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவிற்கு வட சென்னை திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்கு பிறகு அவருக்கு அதிகமான தமிழ் திரைப்படங்கள் கிடைத்தன. இதுவரை 40க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

இவர் தற்சமயம் இயக்குனர் மிஸ்கின் இயக்கிவரும் பிசாசு 2  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் வந்த பேய் படங்களில் சற்று வித்தியாசமான படமாக இருந்த திரைப்படம்தான் பிசாசு. இந்த படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது. இதனால் பிசாசு 2 திரைப்படத்திற்கும் கூட அதிகமான மக்கள் எதிர்ப்பார்ப்பில் இருந்தனர்.

இந்நிலையில் பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக ஒரு காட்சியில் வருவதாக கூறப்பட்டது. அதற்கு பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்தன.

தற்சமயம் ஆண்ட்ரியா நிர்வாணமாக வரும் அந்த காட்சியை படக்குழு நீக்கியுள்ளது. இதுக்குறித்து கூறும்போது படத்தில் நிர்வாண காட்சி இருந்தால் அது குடும்ப பார்வையாளர்களை போய் சேராது. பிசாசு 2 அனைவருக்குமான படமாக இருக்க வேண்டும். எனவே அதற்காக அந்த நிர்வாண காட்சியை நீக்கியுள்ளோம் என கூறியுள்ளனர்.

இதற்கிடையே படத்தில் கட் செய்யப்பட்ட காட்சியை யு ட்யூப்பில் வெளியிடுங்களேன் என ஆண்ட்ரியா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர். வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிசாசு 2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Refresh