Latest News
என்ன மொத்த சினிமாவையும் குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா!.. உதயநிதியை வச்சு செஞ்ச விஷால்!.. ரொம்ப பாதிக்கப்பட்டுட்டாரு போல!.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஷால். கடந்த வருடம் முதலே அவருக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்சமயம் ரத்னம் திரைப்படத்தில் நடித்து வரும் விஷால் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் அவர் ரெட் ஜெயண்ட் குறித்து தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தார். அதில் கூறும்போது ”தீபாவளி ரிலீஸ் அப்ப எனக்கும் அவங்களுக்கும் பிரச்சனை ஆணுச்சு. ரெட் ஜெயண்ட் ல உள்ள முக்கியமான ஒருத்தரால எனக்கு பிரச்சனை வந்துச்சு.
ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் பண்ண சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இன்னிக்கு தமிழ் சினிமா என் கையில் இருக்குன்னு சொல்ற யாரும் உருப்பட்டது கிடையாது. சும்மா ஏ.சில உக்காந்துக்கிட்டு படத்தை ரிலீஸ் பண்ணுன்னு ஆர்டர் போட்டுட்டு இருக்கிற தயாரிப்பாளர்கள் இல்ல. இவங்க எல்லாம் வட்டிக்கு வாங்கி ரத்தம் சிந்தி படத்தை தயாரிச்சவங்க.
அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த மார்க் ஆண்டனி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண வந்தா நீங்க தள்ளி ரிலீஸ் பண்ணுங்கன்னு என்ன சொல்ல இவங்க யாரு. அதுக்கு இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு. யாரு இவங்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது. அது எனக்கு கோபத்தை ஏற்படுத்துனுச்சு. என்று பிரச்சனையை விவரித்துள்ளார் விஷால்.
Source – Link