போன வைடா இல்லைனா அடிச்சி மூஞ்ச உடைச்சுடுவேன்!.. தயாரிப்பாளர் பேச்சால் கடுப்பான வாலி.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!.

Tamil Poet Vaali : சினிமாவில் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் கவிஞனாக பார்க்கப்படுபவர் பாடலாசிரியர் வாலி. வாலி தமிழ் சினிமாவில் மற்ற பாடல் ஆசிரியர்களை விடவும் வெகு காலம் பாடலாசிரியராக இருந்து வந்துள்ளார்.

மூன்று தலைமுறைகள் மாறிய பொழுதும் வாலியின் பாடல் வரிகளுக்கு இருந்த வரவேற்பு மட்டும் குறையவே இல்லை என்று கூறலாம். வாலி சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டத்தில் அவரது பாடலுக்கு அதிகமான அங்கீகாரத்தை கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் (MGR) நடிக்கும் படங்களுக்கு அதிகபட்சம் வாலிதான் பாடல் வரிகளை எழுதுவார். இதனால் எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்த நிலையில் 1972 இல் வெளியான அன்னமிட்ட கை (Annamitta Kai) என்கிற திரைப்படத்திற்கும் வாலிதான் பாடல் வரிகள் எழுத வேண்டும் என்று முடிவானது.

படத்தின் மற்ற வேலைகள் முடிந்த நிலையில் பாடல் வரியை வாலி எழுதுவதற்காக அனைத்து விஷயங்களையும் தயார் செய்து வைத்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் சிவசாமி. இசையமைப்பாளர்கள் நடிகர் எம்.ஜி.ஆர் வரை அனைவரும் வந்த பிறகும் வாலி மட்டும் பாடல் எழுதுவதற்கு வரவில்லை.

என்னவென்று விசாரித்த பொழுது வாலியின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதென்றும் சிசேரியன் செய்தால்தான் குழந்தையை எடுக்க முடியும் என்றும் கூறி இருப்பதால் அவர் வரவில்லை என்று கூறினர். இந்த நிலையில் வாலிக்கு போன் செய்த தயாரிப்பாளர் அவரை வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் தன்னுடைய மனைவியை இந்த நிலையில் விட்டு விட்டு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் வாலி. இதனை அடுத்து அந்த தயாரிப்பாளர் நீங்களா ஆபரேஷன் செய்ய போகிறீர்கள் மருத்துவர் தானே செய்யப் போகிறார் கிளம்பி வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதனால் கடுப்பான வாலி போனை ஒழுங்கா வைடா இல்லையென்றால் அடித்து உடைத்து விடுவேன் என்று சத்தம் போட்டுவிட்டு ஃபோனை வைத்துள்ளார். அதற்கு பிறகு மறுநாள் வாலிக்கு போன் செய்த எம்.ஜி.ஆர் உங்கள் மீது தவறு இல்லை வாலி, நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நேரில் வந்து வாலியின் குழந்தையை பார்த்து தங்க சங்கிலியை அந்த குழந்தைக்கு போட்டும் சென்றுள்ளார் எம்.ஜி.ஆர்.