ஐமேக்ஸில் பொன்னியின் செல்வன் –  மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தற்சமயம் தமிழ் சினிமா ரசிர்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த திரைப்படம் நீண்ட வரலாறை கொண்டது. ஏனெனில் எம்.ஜி.ஆர் காலம் முதலே இந்த கதையை படமாக்க வேண்டும் என்கிற பேச்சு தமிழ் திரையுலகில் இருந்து வருகிறது.

தற்சமயம் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் மணிரத்னமும் கூட 15 வருடங்களுக்கு முன்பே இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதிவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு வழியாக இந்த கதை தற்சமயம் திரைப்படமாக்கப்பட்டுவிட்டது. வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஐமேக்ஸிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஐமேக்ஸ் என்பது திரையரங்குகளின் அடுத்த தொழில்நுட்பமாகும். பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே எப்போதும் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும். ஆனால் தற்சமயம் முதன் முதலாக தமிழில் பொன்னியின் செல்வன் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த தரத்திலான படத்தை நாம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் கண்டு களிக்கலாம். ஆனால் சாதரணா டிக்கெட் கட்டணத்தை விட ஐமேக்ஸ் கட்டணம் கூடுதலாக இருக்கும். இருந்தாலும் படத்தின் வரவேற்பு காரணமாக மக்கள் ஐமேக்ஸிலும் பார்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh