ட்ரெயின்ல கூட்டத்துல ஏறுன மாதிரி அரசியலுக்கு வந்துட்டாரு… பவண் கல்யாணை வச்சி செய்த பிரகாஷ்ராஜ்.!

நடிகர் பிரகாஷ்ராஜ் வெகு காலங்களாகவே தொடர்ந்து அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை பேசி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து வழுவாக பி.ஜே.பிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் நேரடியாக களத்தில் இறங்கவில்லை என்றாலும் கூட பிரகாஷ்ராஜ் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி போடுவது குறித்து அவர் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது அவர்களின் மனநிலை  என்ன என்பது அனைவருக்குமே தெரியும்.என் நாட்டை என் மொழியை என் வரலாற்றை அவர்கள் என்ன பண்றாங்கன்னு தெரியும்.

prakash raj
prakash raj

மொழியை எதிர்த்து நாங்க நிற்கும்போது இப்போ அதிமுக எங்களுக்கு ஆதரவா நிற்குமா இல்லை கூட்டணி கட்சிக்கு ஆதரவா நிற்குமா. இதுக்கு நடுவுல பவண் கல்யாண் பண்றது எல்லாம் இவங்களோட வியூகம். பவண் கல்யாண் எப்படினா இந்த பாம்பே செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நாம போய் நின்னா போதும்.

அங்க இருக்குற கூட்டத்துக்கு அவங்களே ரயிலில் ஏத்தி விட்டுடுவாங்க. அப்படி ஏறுனவன்தான் பவண் கல்யாண். ஒரு நாள் இறக்கி விடுவாங்க அப்ப தெரியும். பி.ஜே.பிய பொறுத்தவரை யாருக்கும் அவங்க நிரந்தர நண்பன் கிடையாது என கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version