நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக மிக பிரபலமாக இருந்தவர் ஆவார். பல காலங்களாக வில்லன் நடிகராக நடித்து வந்த பிரகாஷ் ராஜ் ஒரு கட்டத்திற்கு பிறகு பல வித கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு அவருக்கான மார்க்கெட் என்பது இன்னமுமே அதிகரிக்க துவங்கியது.
பிரகாஷ் ராஜ் நடித்த மொழி, அபியும் நானும் போன்ற படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை பெற்றன. அதே சமயம் தொடர்ந்து பிரகாஷ் ராஜ் அரசியல் சார்ந்தும் பேசி வருகிறார். தவறு செய்வது ஆளும் கட்சியாகவே இருந்தாலும் கூட அதை வெளிப்படையாக கூறிவிடுவார் பிரகாஷ் ராஜ்.
அதே போல தொடர்ந்து பா.ஜ.க கட்சிக்கு எதிராக அவர் நிறைய பதிவுகளை இட்டுள்ளார். இந்த நிலையில் ஒரு முறை பிரகாஷ் ராஜ்க்கு போன் செய்து திருமாவளவன் அவர்கள் பேசினார். அப்போது நிறைய அரசியல் விஷயங்களை பேசுகிறீர்கள். ஆனால் எந்த அரசியல் மேடையிலும் உங்களை காண முடியவில்லையே என கேட்டிருந்தார் திருமாவளவன்.

அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ் எனக்கு எந்த கட்சிக்கும் ஆதரவாக இருப்பதற்கு விருப்பமில்லை என கூறிவிட்டார். அப்போது பேசிய திருமாவளவன் நாங்கள் ஒரு விருது வழங்கும் விழாவை நடத்த இருக்கிறோம். அதில் நீங்கள் கலந்துக்கொள்ள முடியுமா என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ் நான் எந்த கொள்கையை பேசி கொண்டிருக்கிறேனோ அதற்காக போராடி கொண்டிருப்பவர் நீங்கள். அதனால் என் தோழர் அல்லவா நீங்கள். உங்களுக்காக எப்படி வராமல் இருப்பேன் என கூறியுள்ளார். இந்த விஷயத்தை பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.