News
ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’ கதை இதுதானா? லீக் ஆன தகவல்!
தமிழில் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கியவர் அவரது மகள் சௌந்தர்யா. பின்னர் கடந்த சில காலமாக படங்கள் இயக்காமல் இருந்து வந்த அவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க தொடங்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ‘லால் சலாம்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் படத்தில் கௌரவ தோற்றத்தில் வருவதாகவும், அந்த கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ‘லால் சலாம்’ படத்தின் கதை கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘கை போ ச்சே’ என்ற படத்தின் கதையைதான் தமிழில் ரீமேக் செய்து எடுப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இது ரீமேக்தானா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
