சிபியை கழட்டிவிட்டு பிரதீப்புடன் கூட்டணி போட்ட ரஜினிகாந்த்! – நடந்த சம்பவம் என்ன?

தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதற்கு அடுத்து ரஜினி இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் திரைப்படம் பண்ணலாம் என முடிவாகி இருந்தது.

சிபி சக்ரவர்த்தியின் கதை பிடித்து போகவே அவருடன் திரைப்படம் பண்ணலாம் என முடிவெடுத்திருந்தார் ரஜினிகாந்த். எனவே படத்திற்கான அனைத்து வேலைகளும் துவங்கின. சிபி சக்ரவர்த்தியும்  அவரது உதவி இயக்குனர்களோடு சேர்ந்து இந்த படத்திற்கான வேலைகளை செய்து வந்தார்.

இதற்கிடையே தற்சமயம் லவ் டுடே திரைப்படம் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்தது. இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினி.

இதனையடுத்து தற்சமயம் பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்ன என கூறும்போது ரஜினிக்கு சிபி சக்ரவர்த்தியின் கதை பிடிக்கவில்லை என்றும், அதை விட பிரதீப் ரங்கநாதன் கதை நன்றாக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஜெயிலர் படத்திற்கு அடுத்து இவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Refresh