ரஜினியை பகைச்சிக்கிட்டா இதுதான் நிலைமை!.. சரியான சமயத்தில் ரோஜாவை பொளக்கும் தலைவர் ஃபேன்ஸ்..

தமிழ் சினிமா நடிகர்களில் இன்னமும் ஒரு டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். எப்போதுமே ரஜினிகாந்தின் படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு ரஜினியின் இளமை காலங்கள் முதலே அவருக்கான ரசிக கூட்டம் என்பது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆன்மீகம் தொடர்பாக பல விஷயங்களை அவர் பேசி வருவதை பார்க்க முடியும்.

ரஜினியின் வளர்ச்சி:

ரஜினியுடன் நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நடிகை ரோஜா. இந்த நிலையில் தற்சமயம் அரசியலில் இருந்து வரும் ரோஜா பல மேடைகளில் பேசும் பொழுது ஒருமுறை ரஜினியை கேலி செய்து கூட அவர் பேசியிருக்கிறார்.

rajinikanth

அந்த சமயங்களில் ரசிகர்கள் எல்லோரும் ரோஜாவை அதிகமாக விமர்சித்து வந்தனர். ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்து வரவேற்பை பெற்றுவிட்டு இப்பொழுது ரஜினிகாந்தையே தவறாக பேசுவது சரியா என்பது அவர்களது கேள்வியாக இருந்தது.

நடிகை ரோஜா பேச்சு:

இருந்தாலும் தொடர்ந்து மேடையில் ரோஜா இந்த மாதிரியான சர்ச்சையான பேச்சுக்களை பேசுவதை நிறுத்தவில்லை. இதற்கு நடுவே சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. நேற்று முந்தைய முந்தைய நாள் இந்த தேர்தலுக்கான ரிசல்ட் வெளியானது.

அதில் பார்க்கும் பொழுது ரோஜா நின்ற பாராளுமன்ற தொகுதியில் அவர் தோல்வியை சந்தித்து இருக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

பதில் கொடுத்த ரஜினி ரசிகர்கள்:

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது ரஜினிகாந்த் மாதிரியான ஆன்மீகவாதியை பகைத்துக் கொண்டால் கடவுளே அதற்கு பதிலடி கொடுப்பார். அப்படியான ஒரு பதிலடியைதான் தற்சமயம் ரோஜா சந்தித்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.