News
என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் – கர்நாடகாவிலும் தமிழரை புகழ்ந்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் வெகு காலமாக சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்த்தை பெற்று வரும் நடிகராக இருக்கிறார். எங்கு எந்த விழாவில் கலந்துக்கொண்டாலும் முதலில் அவர் துவங்கும் வாசகம் “என்னை வாழ வைத்து கொண்டிருக்கும் தமிழ் மக்களே” என்பதுதான்.

ரஜினிகாந்த் பிறந்தது கர்நாடகாவை இருந்தாலும் ஒரு நடிகராக அவர் கோடிகளில் வாழ காரணமாக இருப்பது தமிழ் மக்கள் என்பதால் அந்த விசுவாசத்தை ரஜினிகாந்த் இப்படி வெளிப்படுத்துகிறார் என கூறப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழாவிற்காக தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார்.
அப்போது விருது வழங்கும் விழாவில் பேசிய ரஜினி அங்கேயும் கூட என்னை வாழ வைத்த தமிழ் மக்களே என துவங்கினார். உடனே அங்கு இருக்கும் தமிழர்கள், கர்நாடக மக்கள் அனைவருமே அவருக்கு கைத்தட்டியுள்ளனர்.
தாய் தேசத்திற்கு சென்றாலும் கூட அங்கேயும் தமிழ் மக்களுக்கு நன்றி சொல்லியே தனது உரையை துவங்கியுள்ளார் ரஜினிகாந்த் என பலரும் இதற்காக அவரை பாராட்டியுள்ளனர்.
