சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக மாறியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாக இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவிற்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது.
தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் கூட வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா மந்தனா. இந்த நிலையில் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு வாரிசு திரைப்படத்தில் நடித்தார் ராஷ்மிகா. இப்போது ராஷ்மிகாவின் மார்க்கெட் வெகு பெரிதாகிவிட்டது. அவர் நடித்த அனிமல் புஷ்பா மாதிரியான படங்கள் அதிக வரவேற்பை பெற்றன.
இப்போது அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் வாய்ப்பை பெற்று வருகிறார் ராஷ்மிகா. அந்த வகையில் ராஷ்மிகா தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் சாவா. மராட்டியின் அரசனாக இருந்தா சாம்பாஜியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது.
இந்த படத்தில் அவரின் மனைவியான மகராணி யசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்த நிலையில் அந்த படத்தில் ராஷ்மிகா நடனமாடிய பாடல் ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அந்த பாடலை நீக்கினால்தான் படத்தை வெளியிடலாம் என கூறியுள்ளது சென்சார் அமைப்பு.
புஷ்பா 2 திரைப்படத்தில் வருவது போல ஆபாச காட்சிகளோ அல்லது ராணியின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான காட்சிகளோ அந்த படத்தில் இருந்திருக்கலாம். அதனால்தான் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.