தொடர்ந்து சினிமாக்களில் காவலர்களை மோசமானவர்களாக சித்தரித்து வருவதை பார்க்க முடியும்.
ஒரு பக்கம் காவலர்களின் அடக்குமுறை அதிகார முறை என்று பல விஷயங்கள் இங்கு பேசப்பட வேண்டியதாக இருக்கின்றன. அதே சமயம் வேலை ரீதியாக காவலர்களின் வேலை என்பது எவ்வளவு கடினமானது என்பதும் ஒரு பக்கம் பேச வேண்டியதாக இருக்கிறது.
இந்த மாதிரியான விஷயங்களை பேசும் திரைப்படங்கள் மிக குறைவு என்று தான் கூற வேண்டும். அப்படியான நிலையில் தற்சமயம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒரு சீரிஸ் ஒன்று வெளியாக இருக்கிறது.
ரோந்து என்கிற இந்த சீரியஸில் ரோந்து செல்லும் காவலர்கள் பார்க்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரிஸ் செல்கிறது இதன் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது