Connect with us

மோசமாகி வரும் சமந்தாவின் உடல்நிலை? – தற்போதைய நிலவரம் என்ன?

News

மோசமாகி வரும் சமந்தாவின் உடல்நிலை? – தற்போதைய நிலவரம் என்ன?

Social Media Bar

மிக குறுகிய காலங்களிலேயே பெரும் வளர்ச்சியை கண்டவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தாவிற்கு, நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்கள் முக்கிய படங்களாக அமைந்தன. 

இதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கூட ஹிட் அடித்து வந்தார் சமந்தா. இடையில் நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து ஆன பிறகு சமந்தாவின் ரீ எண்ட்ரி பிரமாண்டமாக இருந்தது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் புது வகையான நோய் ஒன்றால் அவதிப்பட்டு வருகிறார் சமந்தா. வெகுநாட்களாக சிகிச்சை பெற்று வருவதால் பல பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறார். சிறு வயதிலேயே இவருக்கு இப்படி பிரச்சனை ஆகியிருப்பது சமந்தா ரசிகர்களில் துவங்கி பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது!

வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்கு சென்ற சமந்தா உடல்நிலை சற்று சரியாகி உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென நேற்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்சமயம் எழுந்து நிற்பதே அவருக்கு கடினமான காரியமாக இருப்பதாக கூறப்படுகிறது. பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் சமந்தாவை நலம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top