சரத்குமார் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரமாக அறிமுகமாகி அதற்கு பிறகு அதிக வரவேற்பை பெற்றார். ஆரம்பத்தில் வில்லனாகவே இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் போக போக கதாநாயகனாக வாய்ப்பை பெற்றார்.
கிட்டத்தட்ட 40 வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது எல்லாம் இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைப்பதில்லை என்றாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் ஒரு பேட்டியில் 40 வருடங்கள் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சரத்குமார் சினிமா என்று இல்லை எந்த துறையிலும் பல வருடங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் உடலை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். உடல்நலம் நன்றாக இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் சாதிக்க முடியும் என கூறியுள்ளார் சரத்குமார்.
பிறகு அவரிடம் நீங்கள் நடிப்பு பள்ளி மாதிரியான ஏதாவது ஒன்றில் சேர்ந்துதான் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்தீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத்குமார் இல்லை நான் எந்த நடிப்பு பள்ளியிலும் படித்தது இல்லை. நேரடியாக நடிக்க வந்துவிட்டேன்,
என்னை வைத்து எப்படி நடிப்பை வாங்கினால் படம் நன்றாக இருக்கும் என இயக்குனர்கள் தெரிந்து வைத்திருந்தனர். எனவே அவர்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் என கூறியிருந்தார்.