நெட்டிசன்கள் விமர்சனத்தில் பெட்டியை நிறுத்திய லெஜண்ட் அண்ணாச்சி.. ஊழியர்கள் எல்லாம் ஹேப்பி!.

Legend Sarvanan : தமிழ் சினிமாவில் எப்படியாவது தனக்கென தனி இடத்தை பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருபவர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன்.

தொழிலதிபர்கள் பலருக்குமே சினிமாவில் இப்படி கால் பதிக்க வேண்டும் என்கிற ஒரு ஆசை உண்டு. ஏனெனில் என்னதான் கோடி கோடியாக சொத்துக்கள் இருந்தாலும் பிரபலங்களுக்கு கிடைக்கக்கூடிய வரவேற்புகளும் மரியாதைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

legend

எனவே அந்த ஒரு மரியாதையை பெறுவதற்காக லெஜெண்ட் சரவணன் நடித்த முதல் திரைப்படம்தான் லெஜண்ட். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவரது கடைகளில் தொடர்ந்து லெஜெண்ட் திரைப்படத்தில் வரும் பாடலை அனைத்து டிவிகளிலும் போட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இது உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே குற்றச்சாட்டாக இருந்தது.

இது ஒரு வழியாக லெஜெண்ட் சரவணாவின் காதுகளுக்கு செல்ல அவர் அனைத்து சரவணா ஸ்டோர்களிலும் இந்தப் பாடல்களை நிறுத்தி வைத்து விட்டார். இதனால் தொழிலாளர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள் இனி திரும்பவும் அந்த மாதிரி பாடல்கள் அங்கு ஒளிபரப்பாகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.