Connect with us

என் வயசை மட்டும் கேட்காதீங்க..! யூட்யூபர்களால் நொந்து போன சீரியல் நடிகை!

Latest News

என் வயசை மட்டும் கேட்காதீங்க..! யூட்யூபர்களால் நொந்து போன சீரியல் நடிகை!

Social Media Bar

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் ’வானத்த போல’. ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த சீரியல் அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்ரீகுமார்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் மான்யா ஆனந்த் புகழ் பெற்றுள்ளார்.

சீரியலில் மட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட பலவற்றிலும் இவர் பங்கேற்று வருகிறார். பார்க்க மிகவும் இளமையாக தோன்றும் மான்யா 32 வயதானவர் என்று தகவல்கள் பரவி வந்தது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் பேசியபோது இது குறித்து பேசினார். அப்போது “எனக்கு வயசு 32 எல்லாம் இல்ல.. நான் என்னோட 20+ வயசுல தான் இருக்கேன். யாரோ ஒரு சில யூட்யூபர்கள் என்னோட வயதை 30, 32 என்று இஷ்டத்துக்கு ஏற்றி விட்டுள்ளனர். எங்க போனாலும் இந்த வயசு பற்றி கேட்பதால் என் சந்தோஷமே போயிடுது“ என்று கூறியுள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top