ஊழியர்களுக்கு இப்படி பிரச்சனை கொடுக்கிறது நியாயமா!.. லெஜண்ட் அண்ணாச்சியை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!.

Legend Saravana : என்னதான் பெரும் தொழிலதிபராக இருந்தாலும் அவர்களுக்கு நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு இருப்பதில்லை. அதை பெறுவதற்காக வெளிநாடுகளில் கூட சில செல்வந்தர்கள் சினிமாவில் நடிப்பதுண்டு.

அப்படியாக தமிழில் பிரபலமாவதற்காக திரைப்படத்தில் நடித்த நடிகர்களில் முக்கியமானவர் நம்ம லெஜண்ட் அண்ணாச்சி. இவர் நடித்து வெளியான லெஜண்ட் திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு கூட பெரிதாக எடுப்படவில்லை என்றே கூறலாம்.

ஆனாலும் அவருக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இன்னும் போகவே இல்லை. அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் லெஜண்ட் சரவணன். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தினமும் காலை முதல் இரவு வரை அவரது லெஜண்ட் ஷாப்பிங் மால்களில் தொடர்ந்து இந்த பட பாடல்கள்தான் ஓடி கொண்டிருக்கிறதாம்.

இதுக்குறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள் கூறும்போது சில மணி நேரங்கள் கடையில் இருக்கும் நமக்கே அந்த பாட்டை திரும்ப திரும்ப கேட்பது கொடுமையாக இருக்கிறது. நாள் முழுக்க வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலையை யோசித்து பாருங்கள் என கூறி வருகின்றனர்.

இதுக்குறித்து பேசிய வலைப்பேச்சு அந்தனன் கூறும்போது இதற்கு லெஜண்ட் சரவணன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி லெஜண்ட் கடைகளில் அந்த பாடலை போடக்கூடாது என கூறி வருகிறார்.