அந்த ஒரு விஷயம் போதும் நான் விஜயகாந்தை போய் பாக்குறதுக்கு!.. தமிழ்நாட்டிலையே தில்லான ஆளு… உணர்ச்சிவசப்பட்ட நக்கீரன் கோபால்!.
Nakeeran Gobal : தமிழ் பத்திரிக்கைகளிலேயே அதிக தைரியமான பத்திரிக்கையாளர் என்றால் அது நக்கீரன் கோபால்தான் என கூறலாம். நடிகர் விஜயகாந்த் கூறுவது போல ஆளுங்கட்சியை எதிர்த்து எழுதும் அளவிற்கு தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் கருத்து சுதந்திரம் அடையவில்லை.
பத்திரிக்கை அலுவலகங்களையே கொழுத்திய நிகழ்வெல்லாம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆனாலும் கூட ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சம காலத்திலேயே அவரால் சத்தியமங்கலம் காட்டு மக்களுக்கு நடக்கும் கொடுமையையும் அங்கு காட்டில் மறைந்து வாழ்ந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வீடியோவையும் வெளியிட்டவர் நக்கீரன் கோபால்.
அந்த வீடியோக்கள் வெளியானப்போதுதான் வீரப்பனை விடவும் தமிழக அரசு அதிகமான ஆட்களை கொன்று குவித்துள்ளது என்பது வெளி வர துவங்கியது. அது தமிழ்நாட்டின் அடுத்த ஆட்சி அதிகாரத்தையே மாற்றி அமைத்தது.
இறுதியில் வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு இவ்வளவு அநீதிகளை நிகழ்த்திய அதிகாரிகளுக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா விருது வழங்கியதால் மிகவும் ஆதங்கப்பட்டவர் நக்கீரன் கோபால். அவர் தற்சமயம் ஒரு பேட்டியில் பேசும்போது தமிழ்நாட்டிலேயே தில்லான ஆள் என்றால் அது விஜயகாந்துதான்.
ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடித்து பேசினார் அல்லவா அதற்காகவே அவரை பார்ப்பதற்காக நான் மியாட் மருத்துவமனைக்கு சென்றேன். முதல் நாள் இரவே சென்று நான் விஜயகாந்தை பார்த்தேன்.