Cinema History
தங்க கூண்டுல அடைச்ச கிளி மாதிரிதான் என் வாழ்க்கை!.. பத்திரிக்கையாளரிடம் மனம் வருந்திய சிம்ரன்!..
Actress Simran : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஸ்ரீதேவி போலவே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரன் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவருக்கு முதலில் தமிழே தெரியாது என்று கூறலாம். லவ் டுடே திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகமானார். லவ் டுடே திரைப்படத்தில் நடிக்கும் போது சுத்தமாக தமிழே தெரியாமல் நடித்திருந்தார் சிம்ரன்.
ஆனால் அவருக்கு தமிழ் சினிமா இப்படியான வரவேற்பை கொடுக்கும் என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று. அப்போதைய கால கட்டங்களில் குஷ்பூ, சிம்ரன் மாதிரி பல வட மாநில பெண்களுக்கு தமிழ் சினிமா வரவேற்பை கொடுத்து இருக்கிறது.
அப்படியாக சிம்ரன் தொடர்ந்து நடிக்க துவங்கியப்போது விஜய் அஜித் சூர்யா பிரசாந்த் என்று அப்போது பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் வரிசையாக படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் அவருக்கு இந்த கதாநாயகி வாழ்க்கை என்பது அவ்வளவாக பிடிக்கவில்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இது குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறும் பொழுது நான் ஒரு முறை சிம்ரனை நேரில் சென்று பேட்டி எடுத்தேன். அப்பொழுது அவர் கூறும் பொழுது உண்மையில் எனக்கு இந்த பிரபலமாக இருக்கும் வாழ்க்கை பிடிக்கவில்லை.
இதற்கு முன்பு இருந்த சாதாரணமான வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. நான் நினைத்தால் ஒரு கடையில் போய் சாப்பிட முடியும் ஒரு கடைக்கு பொருள் வாங்க செல்ல முடியும். ஆனால் ஒரு நடிகையான பிறகு வீட்டை விட்டு என்னால் வெளியில் செல்ல முடிவதில்லை.
உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு தங்கக் கூண்டுக்குள் அடைப்பட்ட கிளி மாதிரிதான் என்னுடைய வாழ்க்கை இருக்கிறது. எனவே ஒரு பிரபலமாக இருப்பது அவ்வளவு சந்தோஷமான விஷயம் கிடையாது என்று வெறுப்புடன் கூறி இருக்கிறார் சிம்ரன். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.