Latest News
குட் பேட் அக்லியில் அஜித்தை ரெட்ரோ லுக்கில் பார்க்கலாம்!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!..
தமிழில் பிரபலமான நடிகர்களில் தல அஜித் முக்கியமானவர். துணிவு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் விடா முயற்சி. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டுள்ளது.
நிதி தொடர்பான பிரச்சனைகள் காரணமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படங்களை காமெடியாக இயக்க கூடியவர் என்பதால் வில்லன், அட்டகாசம் காலக்கட்டத்தில் இருந்தது போல அஜித்தை இதில் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.
இதற்கு நடுவே இந்த திரைப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒரு அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் வருவது போல நிறைய தாடி வைத்துள்ள கதாபாத்திரம். மற்றொரு கதாபாத்திரம் இளமையான அஜித் என கூறப்படுகிறது.
கிராபிக்ஸ் முறைகளை பயன்படுத்தி ஆசை, வாலி காலக்கட்டத்தில் அஜித் இருந்தது போல அவரை மாற்ற போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அப்படி அஜித் அதில் வரும் பட்சத்தில் நிச்சயமாக குட் பேட் அக்லி பெரும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.