Connect with us

திரைக்கதையில் கோட்டை விட்டதா!.. சிங்கப்பூர் சலூன்!.. பட விமர்சனம்!..

singapore saloon

Latest News

திரைக்கதையில் கோட்டை விட்டதா!.. சிங்கப்பூர் சலூன்!.. பட விமர்சனம்!..

cinepettai.com cinepettai.com

RJ Balaji Singapore Saloon Movie : காமெடி நடிகரான ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த எல்.கே.ஜி மூக்குத்தி அம்மன் மாதிரியான திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இன்று 25.01.2024 அவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்கிற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து இரண்டு விதமான விமர்சனங்களும் வந்துக்கொண்டுள்ளன.

படத்தின் கதை:

ஆர்.ஜே பாலாஜியும் அவரது நண்பர் கிஷாந்த் தாசும் தென்காசியில் ஒரு கிராமத்தில் வசித்து வருகின்றனர். சின்ன வயது முதலே முடி திருத்தும் சாஷா என்பவரின் திறமை மீது இவர்களுக்கு அதிக ஈடுபாடு உண்டாகிறது. ஒரு பிச்சைக்காரனை கூட பணக்காரனின் தோற்றத்திற்கு முடி திருத்துபவரால் கொண்டு வர முடியும் என்பதை கண் முன்னே காட்டுகிறார் சாஷா.

இதனையடுத்து வளர்ந்த பிறகு பிரபலங்களுக்கு எல்லாம் முடி திருத்தும் ஹை க்ளாஸ் பார்பராக வேண்டும் என ஆசைப்படுகிறார் ஆர்.ஜே பாலாஜி. அதற்காக பெரும் பொருட் செலவில் சிங்கப்பூர் சலூனை துவங்குகிறார். ஆனால் அங்கு ஏற்கனவே கால் பதித்திருக்கும் நிறுவனங்களோடு இவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், பிறகு அதிலிருந்து ஆர்.ஜே பாலாஜி எப்படி மீண்டு வருகிறார் என்பதாக கதை இருக்கிறது.

திரைக்கதையில் நடந்த சொதப்பல்கள்:

இந்த திரைப்படத்தில் இறுதியில் முடித்திருத்துவோருக்கு சமர்ப்பணம் என போடப்பட்டாலும் அதற்கு இந்த திரைப்படம் நியாயமாக நடந்துக்கொண்டதாக என்பது சந்தேகமே.

முல்க் ராஜ் ஆனந்த் என்கிற எழுத்தாளர் பார்பர் ட்ரேட் யூனியன் என்கிற ஒரு சிறுகதையை எழுதியிருப்பார். அதில் பெரும் சமூகத்தால் உதாசீனப்படுத்தப்படும் ஒரு முடித்திருத்தும் நபர் கோபமாகி இனி யாருக்கும் வீட்டுக்கு வந்து சவரம் செய்ய மாட்டோம் என கூறி சலூன் என்கிற விஷயத்தை தோற்றுவிப்பதாக அந்த கதை இருக்கும்.

அந்த சிறுகதையில் முடித்திருத்துவோர் குறித்து பேசப்பட்டிருந்த அரசியல் கூட இந்த படத்தில் பேசப்படவில்லை. ஒரு பக்கம் முடித்திருத்தும் தொழில் கேவலமான தொழில் அல்ல என்கிற விஷயத்தை படம் முன் வைத்தாலும் கூட வரலாறு ரீதியாக மருத்துவர் என்கிற சமூகமாக இருந்து எப்படி அவர்கள் முடி திருத்துவோர் சமூகமாக மாறினர்.

அவர்கள் படும் கஷ்டங்கள் ஒடுக்குமுறை குறித்து படம் பெரிதாக பேசவில்லை. இது படத்தின் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பேசாத காரணத்தால் படம் கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் ஒரு இளைஞனுக்குமான சண்டை என்கிற ரீதியிலேயே நின்றுவிட்டது. ஆனால் அதை தாண்டி எண்டர்டெயிண்ட்மெண்டாக படம் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. அதற்கு தேவையான அளவில் காமெடிகளும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

To Top