Connect with us

நெல்சன் தயாரிப்பில் அடுத்த படத்தில் கமிட் ஆன கவின்!.. விஜய் ஆண்டனிக்கு டஃப் கொடுப்பார் போல!

kavin nelson

Latest News

நெல்சன் தயாரிப்பில் அடுத்த படத்தில் கமிட் ஆன கவின்!.. விஜய் ஆண்டனிக்கு டஃப் கொடுப்பார் போல!

cinepettai.com cinepettai.com

கவின் தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமான நடிகர்களாக இருந்து வருகிறார். ஏற்கனவே பெரிய நடிகர்கள் சம்பளம் அதிகரித்ததால் சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஹீரோ கிடைக்காமல் திண்டாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கவின் மாதிரி வளர்ந்து வரும் நடிகர்களை வைத்துதான் அவர்கள் திரைப்படங்களை இயக்குகின்றனர். பிக்பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான கவின் தொடர்ந்து அதை ஒரு வாய்ப்பாக கொண்டு எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து விட வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார்.

இந்த நிலையில் கவின் நடித்த லிஃப்ட் திரைப்படம் ஒ.டி.டியில் வெளியானது. அந்த படத்திற்கு நல்ல வகையிலான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த டாடா திரைப்படத்திற்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. கவினை பொறுத்தவரை நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவருக்கு வரவேற்பும் அதிகரித்தும் வருகிறது.

சமீபத்தில் அவர் நடித்த ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது. அந்த திரைப்படத்திற்கும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்து நெல்சன் தயாரிப்பில் பிச்சைக்காரனாக ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் கவின்.

இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ் லுக்கே எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் பார்க்கும்போது மனம் நலம் பாதிக்கப்பட்ட பிச்சை காரர் போல இருக்கிறார் கவின்.இந்த படத்திற்கு ப்ளடி பெக்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

POPULAR POSTS

ilayaraja bharathiraja
ajith
karthik subbaraj cv kumar
ajith
kamalhaasan lingusamy
vengatesh bhat
To Top