செய்யாத தப்புக்காக அம்மா அப்பா மூஞ்சுலையே முழிக்க முடியாத நிலைமை ஆயிடுச்சு!.. மனகுமறலை பகிரும் ஜீவா பட நடிகை!..
சினிமாவில் நடிகைகளுக்கு சர்ச்சைகள் என்பது எப்போதுமே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான். சில நடிகைகள் அதை சாதாரணமாக தாண்டி செல்வார்கள். ஆனால் சில நடிகைகளுக்கு அது பெரும் வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
அப்படியான ஒரு விஷயத்தில் சிக்கியவர்தான் அனுயா பகவத். இவர் தமிழில் சிவா மனசுல சக்தி, நண்பன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஏன் அவர் சினிமாவில் தற்சமயம் நடிப்பதில்லை என்று கூறியிருந்தார். அதில் கூறும்போது அவரை குறித்து தவறான வீடியோ ஒன்று வெளியானதை பற்றி கூறியிருக்கிறார். அந்த வீடியோ வெளியான போதுதான் எனது வாழ்க்கையே மாறிவிட்டது.
பொதுமக்களும் சினிமாவிலும் பேசுவதை பற்றி கூட எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எனது வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் கூட என்னால் முழிக்க முடியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் அந்த வீடியோவில் இருந்தது நான் கிடையாது.
ஒருவேளை நான் அந்த வீடியோவில் இருந்து உண்மையான வீடியோவாக அது இருந்திருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் நான் செய்யாத தப்புக்காக தொடர்ந்து அப்பொழுது விமர்சனத்திற்கு உள்ளானேன்.
எனவேதான் நடிப்பை விட்டே சென்றேன் என்று கூறி இருக்கிறார் மேலும் அவர் கூறும் பொழுது நடிப்பை விட்டு சென்றேனே தவிர திரை துறையை விட்டு நான் செல்லவில்லை. ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் தற்சமயம் பணிபுரிந்து வருகிறேன். நான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டியில் படித்ததனால் எனக்கு திரைப்படம் எடுப்பது தொடர்பான எல்லா விஷயங்களும் தெரியும்.
எனவே அந்த தயாரிப்பு நிறுவனத்தில் அது தொடர்பான வேலைகளை பல காலங்களாக பார்த்து வருகிறேன். முடிந்தால் எதிர்காலத்தில் திரைப்படம் இயக்கலாம் என்றும் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.