Connect with us

நானே பெரிய நடிகன் என்கிட்டயேவா!.. சிவாஜிக்கே விபூதி அடித்த அசிஸ்டெண்ட்!.. இப்படிதான் ரகசியம் எல்லாம் கசிஞ்சுதா!..

sivaji 1

Cinema History

நானே பெரிய நடிகன் என்கிட்டயேவா!.. சிவாஜிக்கே விபூதி அடித்த அசிஸ்டெண்ட்!.. இப்படிதான் ரகசியம் எல்லாம் கசிஞ்சுதா!..

cinepettai.com cinepettai.com

Sivaji Ganesan : தமிழ் சினிமாவிற்கும் கிசுகிசு விற்கும் இடையே மிகுந்த நெருக்கம் உண்டு என்று கூறலாம். கிசுகிசு என்ற ஒரு விஷயமே இல்லாத பொழுது அதை தமிழில் முதல் முதலில் ஆரம்பித்து வைத்தது குமுதம் பத்திரிகைதான்.

ஏனெனில் பொதுவாக நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை எழுதும் பொழுது அதனால் அதை எழுதும் பத்திரிகையாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த குமுதம் நிறுவனம் அந்த குறிப்பிட்ட நபர்களின் பெயரை குறிப்பிடாமலேயே அந்த செய்தியை எழுத வேண்டும் என்று கூறி அதற்கு கிசு கிசு என்று ஒரு பெயரையும் வைத்தனர்.

மேலும் இந்த கிசுகிசுவை எழுதும் பத்திரிகையாளர் யார் என்றும் வெளியே வராது. இதை துவங்கியவுடன் தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான ஒரு புள்ளியை கிசு கிசு எழுதுவதற்காக பிடித்தனர். குமுதம் நிறுவனத்தினர் அவரிடம் தொடர்ந்து சினிமாவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை தங்களுக்கு எழுதித் தரும்படியும் அப்படி எழுதி தருவதால் தங்களுக்கு பணம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றனர் குமுதம் நிறுவனத்தினர்.

மேலும் அந்த நபரின் பெயரும் அந்த கட்டுரையில் இடம் பெயராது என்று கூறியதை அடுத்து அந்த நபர் தொடர்ந்து பல தகவல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். இது சினிமாவில் இருக்கும் பல நடிகர் நடிகைகளை வெகுவாக பாதித்திருக்கிறது.

sivaji-ganesan
sivaji-ganesan

அந்த சமயத்தில் நடிகர் சங்க தலைவராக சிவாஜிகணேசன் இருந்து வந்தார் சிவாஜி கணேசனிடம் வந்து இது தொடர்பாக பல நடிகர்கள் புகார் கொடுக்க துவங்கினர். இது தங்களின் சினிமா வாழ்க்கையை பாதிப்பதாக கூறின உடனே சிவாஜி அவரது உதவியாளரான எம் பி மணியை அழைத்து குமுதம் பத்திரிக்கையில் கிசுகிசுக்களை யார் எழுதுகிறார் என்பதை கண்டுபிடிங்கள் என்று கூறியிருக்கிறார்.

எம்பி மணியும் சரி என்று கூறியிருக்கிறார். ஆனால் சில மாதங்கள் ஆன பிறகும் கூட யார் அந்த நபர் என்பதை எம்.பி மணி கண்டுப்பிடிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒருநாள் ஒரு முக்கியமான ரகசிய தகவல் ஒன்று குமுதம் பத்திரிகையில் வெளியானது.

அந்த தகவல் எம்.பி மணிக்கும் சிவாஜிக்கும் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அதை படித்த போதுதான் சிவாஜிக்கு ஒரு விஷயம் விளங்கியது இந்த கிசுகிசு தகவல்களை எழுதி கொடுப்பதே எம்பி மணிதான் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது.

இதனை அடுத்து எம்பி மணியை அழைத்த சிவாஜி கணேசன் நானே பெரிய நடிகன் என்கிட்டயே நீ நடித்திருக்கிறாய் என்னாலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி இனி இது போல கிசுகிசுக்கள் எழுதக்கூடாது என்று கூறி அவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

To Top