அந்த பாட்டு நல்லாவே இல்ல!.. தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டு சிவாஜி படத்தில் ஹிட் கொடுத்த பாடல்!.
சினிமாவில் நடிகர் திலகம் என்றும் நடிப்பின் இமையம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பல பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளன. பெரும்பாலும் சிவாஜி கணேசனின் படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதுவார்.
இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டு வந்த மணபந்தல் என்னும் திரைப்படத்தில் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத, எம்.எஸ் வி இசையி பாடல்கள் தயாராகின. ஆனால் அதில் ஒரு பாடல் மட்டும் படத்தின் தயாரிப்பாளரான ராமன்னாவிற்கு பிடிக்கவில்லை.
எனவே அந்த பாடல் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார். போட்ட பாடலை எதற்கு வீணாக்க வேண்டும் என அந்த பாடலை அப்படியே சிவாஜி கணேசன் சாவித்திரி நடித்த பாசமலர் திரைப்படத்தில் அவர்கள் பயன்படுத்தி விட்டனர்.
ஏனெனில் அந்த படத்திலும் இவர்கள் இருவர்தான் பணிப்புரிந்து வந்தனர். பாசமலர் படத்தில் வந்த அந்த வாரோயோ தோழி வாரோயோ என்கிற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது திருமணங்களில் எல்லாம் அந்த பாடல்களே அதிகமாக போடப்பட்டது.