போன் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன்.. அப்பவே இமான் மனைவி குறித்து பேசிய எஸ்.கே!.. ட்ரெண்டாகும் வீடியோ!.

Actor Sivakarthikeyan : இமான் பேட்டி கொடுத்த நாளிலிருந்து சிவகார்த்திகேயன் மீது மக்களுக்கு இருந்த கருத்து என்பது மாறி வருகிறது அதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமானின் மனைவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பொழுது அது மேலும் அதிக பிரச்சனையை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயனுக்கும் இமான் மனைவிக்கும் இருந்த உறவின் காரணமாகதான் இமானுக்கும் அவர் மனைவிக்கும் இடையே விவாகரத்து ஆனது என்பது பரவலாக இப்பொழுது பேச்சுப் பொருளாக இருந்தது.

அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாத பொழுதும் நெட்டிசன்கள் மத்தியில் இந்த தகவல் இப்படித்தான் பரவி வருகிறது. அதற்கு தகுந்தார் போல வலைப்பேச்சு பிஸ்மி போன்ற பத்திரிகையாளர்களும் கூட அதை உண்மை என கூறும் வகையில் சில செய்திகளை பகிர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் முன்பு ஒரு பேட்டியில் இமான் மனைவி குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கூறும் பொழுது அண்ணி அண்ணி என்று எப்பொழுதும் அவர்களுக்கு போன் செய்து கொண்டே இருப்பேன். அதனால் அவர்களே எப்போதும் அண்ணி அண்ணி என்று என்னை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறாயே என கேட்டார்கள்.

https://twitter.com/Yuvaraj07309839/status/1754093134341083422

எங்களுக்குள்ளே அவ்வளவு நெருக்கம் என்று சிவகார்த்திகேயன் கூறி இருக்கும் அந்த வீடியோ தற்சமயம் மீண்டும் அந்த சர்ச்சையை கிளப்பி உள்ளது என்று கூறலாம். இதுதான் அயலான் திரைப்படத்தின் தோல்விக்கும் காரணம் என்றும் சில பேச்சுக்கள் இருக்கின்றன.