என்னுடைய சொத்து மதிப்பு இத்தனை கோடி.. வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரத்திலேயே அதிக பிரபலமான நடிகராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிப்புரிந்து வந்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலமாக சினிமா பிரபலங்கள் மத்தியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். மெரினா, மனம் கொத்தி பறவை மாதிரியான ஆரம்பக்கட்ட படங்களே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் நல்ல திரைப்படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஷன் கதாநாயகனாக மாறினார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வெளியான அமரன் திரைப்படம் இதுவரை சிவகார்த்திகேயன் கொடுத்த வசூலை முறியடித்து அதிக வசூலை கொடுத்தது.
அதனை தொடர்ந்து தமிழில் முக்கிய நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளமும் அதிகரித்து வருகிறது. இப்போது தற்சமயம் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இதுக்குறித்து ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் அது ஒரு 45,000 கோடி இருக்கும் என காமெடியாக பதிலளித்தார். மேலும் அவர் கூறும்போது நம்ம என்ன அதானியா அம்பானியா சொத்து மதிப்பு எல்லாம் சொல்றதுக்கு என கூறியிருந்தார். ஆனால் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறைந்தது 500 கோடி இருக்கலாம் என்பது அனுமானமாக இருக்கிறது.