என்னை விட்டுடுங்க.. ப்ளீஸ்.. காருக்குள்ளேயே துடித்தேன்.. உண்மையை பகிர்ந்த புன்னகை நடிகை..!

சினிமாவில் புன்னகைக்கரசி என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. மலையாளத்தை சேர்ந்த சினேகாவிற்கு எதிர்பாராத விதமாகதான் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிப்பதற்கு அதிகமாக போராடி இருப்பார்கள். ஆனால் சினேகா அப்படியெல்லாம் போராடவே இல்லை. மலையாள பிரபலங்கள் கலந்துக்கொண்ட ஒரு விழாவிற்கு எதேர்ச்சையாக சென்றார் சினேகா.

அப்போதுதான் அவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் சினேகா.

sneaha

ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் சினேகாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு விரும்புகிறேன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் நடிக்கும்போது மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார் நடிகை சினேகா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது. விரும்புகிறேன் திரைப்படத்தில் மணலில் புரண்டு நடிப்பது போன்ற காட்சி ஒன்று இருந்தது.

அந்த காட்சியில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் சினேகா. இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது நான் அப்போது அழுதுக்கொண்டே எனது அம்மாவிடம் வந்தேன். இனி நடிக்க மாட்டேன். நடிப்பது கடினமாக இருக்கிறது என கூறினேன். காருக்குள்ளேயே கண்ணீர் விட்டு கதறி துடித்தேன்.

பிறகு அம்மா இந்த படத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என கூறிவிட்டார். ஆனால் அந்த படம் கொடுத்த வரவேற்பு என்னை மீண்டும் நடிக்க வைத்தது.