தற்சமயம் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிக முக்கியமானவராக நடிகை ஸ்ரீலீலா இருந்து வருகிறார். மிகக் குறைந்த வருடங்களிலேயே தெலுங்கு சினிமாவில் பிரபலமாக பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ரீ லீலா.
தற்சமயம் தமிழ் ஹிந்தி என்று மற்ற மொழிகளின் மற்ற மொழிகளிலும் இவர் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்று வருகிறார். வெகு சீக்கிரத்திலேயே இந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஸ்ரீ லீலா மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23 வயதிலேயே 15 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார் ஸ்ரீ லீலா அதே மாதிரி இவ்வளவு சின்ன வயதிலேயே அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஸ்ரீலீலா. இந்த ஒரு நல்ல உள்ளத்தின் காரணமாக அனைவர் மத்தியிலும் இவர் பாராட்டை பெற்று வருகிறார்.
சொந்த வாழ்க்கை பிரச்சனை:
இப்படி எல்லாம் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகையாக இருந்தாலும் ஸ்ரீ லீலாவின் சொந்த வாழ்க்கை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது ஸ்ரீ லீலாவின் தாயாரான ஸ்வர்ணலதா மருத்துவராக இருந்து வந்தவர் ஆவார்.
இவர் அமெரிக்காவில் இருந்து வந்த காலகட்டத்தில் சுபாகர ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சில வருடங்களிலேயே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகுதான் ஸ்ரீ லீலா பிறந்தார்.
இந்நிலையில் ஸ்ரீலீலாவின் தந்தை சுபகர ராவ் தான் என்று பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வந்தாலும் கூட சுபாகரராவ் இதை வன்மையாக நிராகரித்து இருக்கிறார். மேலும் ஸ்ரீ லீலா தன்னுடைய மகள் இல்லை எனவும் தன்னோட சொத்துக்களை அபகரிப்பதற்காக அவ்வாறு வதந்திகளை பரப்பி விடுகிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.
இது ஸ்ரீலீலாவிற்கு மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது புஷ்பா திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரம் தன்னுடைய தந்தையின் பெயரை சொல்ல முடியாமல் தவிப்பது போன்ற ஒரு வாழ்க்கை தான் இவருக்கும் அமைந்திருக்கிறது.