எங்களுக்கே படம் தர முடியாதுன்னு சொல்றீங்களா!.. கோட் பட ரிலீஸில் சிக்கலை ஏற்படுத்திய சன் பிக்சர்ஸ்!.

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் ஓ.டி.டி விற்பனையாவதில்தான் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் அதிக தமிழ் படங்களை நல்ல விலைக்கு வாங்கி வந்தது. ஆனால் ஜனவரி மாதம் துவங்கியப்போதே இந்த வருடத்திற்கு தேவையான அனைத்து படங்களையும் நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிவிட்டது.

GOAT

அந்த லிஸ்ட்டில் கோட் திரைப்படம் இல்லை. இதனால் கோட் திரைப்படம் அதிக விலைக்கு ஓ.டி.டியில் விலை போகவில்லை. இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை செட்டிலைட் ரைட்ஸ் 52 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. கோட் திரைப்படத்திற்கு வெளியீட்டு தேதியெல்லாம் அறிவித்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை வேண்டாம் என கூறியுள்ளதாம்.

ஏனெனில் விஜய் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நினைத்ததாம் ஆனால் படக்குழு அதற்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தால் இந்த படத்தை நிராகரித்துள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.