இனி நல்ல காலம் துவங்கியிருக்கு.. ரெட்ரோ படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.!
நடிகர் சூர்யா வின் 44-வது திரைப்படம் ‘ரெட்ரோ’, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் 2025 மே 1 ஆம் தேதி உலகளாவிய ரீதியில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூல் வசூலில், இந்த படம் உலகளாவிய ரீதியில் ₹46 கோடியை தாண்டியுள்ளது. இதுவே சூர்யாவின் படங்களில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் கலெக்ஷன் ஆகும்.
இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ரெட்ரோ படக்குழு சார்பாக அனைத்து ரசிகர்கள் மற்றும் மக்களுக்கும் நன்றி. திரையரங்கங்கள் ஆரவாரம் செய்து உங்கள் அன்பை பொழிந்ததற்காக மிக்க நன்றி. இது நல்ல நேரத்தின் தொடக்கத்தின் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தருகிறது.