வெகுநாட்களாக கிடப்பில் கிடக்கும் சூர்யா, லோகேஷ் கூட்டணி – திரும்ப வருமா இரும்புகை மாயாவி?

Irumbukai Mayavi

தமிழ் சினிமாவில் எப்போதும் கதாநாயகர்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதை பார்த்திருப்போம். பெரும் கதாநாயகர்களை கொண்டு படம் எடுப்பதற்காக இயக்குனர்கள் காத்திருக்க வேண்டி வரும்.

Irumbukai Mayavi

ஆனால் தற்சமயம் அப்படியான அந்தஸ்த்துக்கள் இயக்குனர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தற்சமயம் அப்படி ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் அனைத்து மாஸ் ஹிட் கொடுக்கும் படங்களாகவும், அதே சமயம் ரசிகர்களை திருப்தி படுத்தும் படங்களாகவும் இருக்கின்றன.

மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்கிற திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் அதற்கு அப்போது வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அந்த படம் எடுக்கப்படவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் பல படங்கள் இயக்கிய பிறகும் கூட இரும்பு கை மாயாவி இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது.

தற்சமயம் விக்ரம் திரைப்படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 மற்றும் கைதி 2 ஆகிய திரைப்படங்களை இயக்க உள்ளார். 

இந்த நிலையில் அடுத்து விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வேறு இயக்க உள்ளதால் அதற்கு பிறகே இரும்பு கை மாயாவி எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இரும்பு கை மாயாவி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh