Connect with us

லியோவ காபியடிச்ச மாதிரி இருக்கே?.. லீக் ஆன வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!..

rajinikanth vettaiyan

News

லியோவ காபியடிச்ச மாதிரி இருக்கே?.. லீக் ஆன வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!..

Social Media Bar

70 வயதை கடந்த பிறகும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் படம் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இதற்கு பெரிதாக விளம்பரங்கள் கூட எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் வேட்டையன் என்கிற ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதே இன்னமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது.

Rajini vettaiyan
Rajini vettaiyan

ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பே இன்னும் கொஞ்ச நாட்களில் முடிய இருக்கிறது. அதே சமயம் வருகிற அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அந்த படத்தின் முதல் பாடல் தற்சமயம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பெரிய செட் போடப்பட்டு அதில்தான் பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தில் வரும் நான் ரெடிதான் வரவா பாடல் போலவே இதிலும் ஏராளமான நபர்கள் நடனம் ஆடுகின்றனர். ரஜினி கோர்ட் போட்டுக்கொண்டு ஆட அவருடன் அனிரூத்தும் ஆடுவது தெரிகிறது.

தற்சமயம் இந்த வீடியோ இணையத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் திரைப்படத்திற்கு இந்த பாடல் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

To Top