தமிழ் சினிமாவில் நடிகர்களின் மகன்கள் ஹீரோவாக அறிமுகம் ஆவது ஒன்றும் புதிய விஷயமல்ல. விஜய் சேதுபதியின் வளர்ச்சியை தொடர்ந்து அவரது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் ஃபீனிக்ஸ். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தது.
அதற்கு சூர்யா சேதுபதி கொடுத்த பேட்டிகளே காரணமாக இருந்தது. ஆனால் திரைப்படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாகதான் அமைந்திருந்தது பீனிக்ஸ் திரைப்படம்.
ஆனாலும் கூட வெளியான முதல் நாள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் முதல் நாள் இந்த திரைப்படம் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.
ஆனால் இரண்டாவது நாளான இன்று படம் மொத்தம் 5 லட்சம் ரூபாய்தான் வசூலித்துள்ளது. ஒரே நாளில் படத்தின் வசூல் குறைந்துள்ளது பீனிக்ஸ் திரைப்படத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படமும் படுதோல்வியை அடைந்தது அனைவரும் அறிந்த விஷயமே.
இந்த நிலையில் சூர்யா சேதுபதிக்கு இந்த படம் வெற்றி படமாக அமையுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.