Tag Archives: பீனிக்ஸ் திரைப்படம்

எனக்கு நீ ஒன்னும் நடிப்பு சொல்லி தர தேவையில்லை.. பீனிக்ஸ் படம் குறித்து கடுப்பான வரலெட்சுமி..!

நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலெட்சுமி போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆவார்.  ஆரம்பத்தில் கதாநாயகியாகதான் இவர் நடித்து வந்தார். பிறகு கதாநாயகியாக நடிப்பதை விடவும் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் அதிகமாக கிடைக்க துவங்கியது.

இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலுமே இவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் வெளியான பீனிக்ஸ் திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்திருந்தார்.

இந்த நிலையில் பட விமர்சகரான ஸ்ரீ தேவி ஸ்ரீதர் இந்த படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் படம் நன்றாக இருந்ததாகவும் ஆனால் வில்லன் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக ஏதாவது செய்திருக்கலாம் எனவும் கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான வரலெட்சுமி இதற்கு பதிலளித்திருந்தார். அவர் கூறும்போது நீங்கள் நேரடியாக எனது பெயரையே சொல்லியிருக்கலாம். நான் உங்களுக்கு விருப்பமான நடிகை இல்லை என தெரியும். சரியாக நடிப்பது எப்படி என நீங்கள் வேண்டுமானால் சொல்லி தாருங்கள் என கோபமாக பதிலளித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ஸ்ரீதேவி நீங்கள் சிறப்பாக நடிக்க கூடிய நடிகைதான். ஆனால் எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் கூட ஒரு இயக்குனர் சிறப்பாக காட்டினால்தான் அந்த நடிப்பு தெரியும். பீனிக்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் கத்துவதை தவிர வேறு ஏதேனும் செய்திருக்கலாம் என பதிலளித்திருந்தார் ஸ்ரீ தேவி ஸ்ரீதர்.

அப்பாவை போலவே மகன் படத்துக்கும் பிரச்சனை..! சரிவை சந்தித்த சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகர்களின் மகன்கள் ஹீரோவாக அறிமுகம் ஆவது ஒன்றும் புதிய விஷயமல்ல. விஜய் சேதுபதியின் வளர்ச்சியை தொடர்ந்து அவரது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் ஃபீனிக்ஸ். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தது.

அதற்கு சூர்யா சேதுபதி கொடுத்த பேட்டிகளே காரணமாக இருந்தது. ஆனால் திரைப்படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாகதான் அமைந்திருந்தது பீனிக்ஸ் திரைப்படம்.

ஆனாலும் கூட வெளியான முதல் நாள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் முதல் நாள் இந்த திரைப்படம் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.

ஆனால் இரண்டாவது நாளான இன்று படம் மொத்தம் 5 லட்சம் ரூபாய்தான் வசூலித்துள்ளது. ஒரே நாளில் படத்தின் வசூல் குறைந்துள்ளது பீனிக்ஸ் திரைப்படத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படமும் படுதோல்வியை அடைந்தது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்த நிலையில் சூர்யா சேதுபதிக்கு இந்த படம் வெற்றி படமாக அமையுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.