நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலெட்சுமி போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆவார். ஆரம்பத்தில் கதாநாயகியாகதான் இவர் நடித்து வந்தார். பிறகு கதாநாயகியாக நடிப்பதை விடவும் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் அதிகமாக கிடைக்க துவங்கியது.
இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலுமே இவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் வெளியான பீனிக்ஸ் திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்திருந்தார்.
இந்த நிலையில் பட விமர்சகரான ஸ்ரீ தேவி ஸ்ரீதர் இந்த படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் படம் நன்றாக இருந்ததாகவும் ஆனால் வில்லன் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக ஏதாவது செய்திருக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
இதனால் கடுப்பான வரலெட்சுமி இதற்கு பதிலளித்திருந்தார். அவர் கூறும்போது நீங்கள் நேரடியாக எனது பெயரையே சொல்லியிருக்கலாம். நான் உங்களுக்கு விருப்பமான நடிகை இல்லை என தெரியும். சரியாக நடிப்பது எப்படி என நீங்கள் வேண்டுமானால் சொல்லி தாருங்கள் என கோபமாக பதிலளித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீதேவி நீங்கள் சிறப்பாக நடிக்க கூடிய நடிகைதான். ஆனால் எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் கூட ஒரு இயக்குனர் சிறப்பாக காட்டினால்தான் அந்த நடிப்பு தெரியும். பீனிக்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் கத்துவதை தவிர வேறு ஏதேனும் செய்திருக்கலாம் என பதிலளித்திருந்தார் ஸ்ரீ தேவி ஸ்ரீதர்.