அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி பெரும் வரவேற்பை பெற்ற ஒருவராக இருந்தவர்தான் நடிகர் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்படுவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த ஒரு கதாநாயகன் என்று கூறலாம்.
ஒரு தயாரிப்பாளர் மிகவும் நஷ்டத்தில் இருந்தார் என்றால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால் அவருக்கு பண பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அப்பொழுது மார்க்கெட் இருந்தது. இருந்தாலும் கூட பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கு யோசித்தன.
படத்தில் சிக்கல்கள்:
அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆரிடம் தேதிகள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தன. அதேபோல திரைப்படத்தில் நிறைய விஷயங்களை அவர் மாற்றி அமைப்பார் என்பது முக்கிய காரணமாக இருந்தது. ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா திரைப்படம் மட்டும்தான்.
அந்த திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்குப் பிறகு ஏ.வி.எம் நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படமே தயாரிக்கவில்லை. இப்படியான நிலையில் பாடலில் கூட ஒரு சிக்கல் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆரை பொருத்தவரை அவர் திரைப்படத்தில் வரும் பாடல்களின் வரிகள் எல்லாம் அவருக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் அது குறித்து பிரச்சனை செய்வார். இந்த நிலையில் நாடோடி போக வேண்டும் ஓடோடி என்கிற பாடலை பதிவு செய்த பொழுது அதன் வரிகளை எம்.ஜி.ஆரிடம் காட்டாமலேயே விட்டுவிட்டனர்.
பாடலால் கடுப்பான எம்.ஜி.ஆர்:
அந்த பாடலை போட்டு காட்டிய பொழுது எம்.ஜி.ஆருக்கு மிக அதிகமாக கோபம் வரவே படபிடிப்பை விட்டு கிளம்பி சென்று விட்டார். பிறகு இயக்குனர் அவரிடம் சென்று பேசிய பொழுது ஒரு நாடோடியை கேவலமாக பேசி எழுதப்பட்டிருக்கும் இந்த பாடலில் நான் எப்படி நடிக்க முடியும் என்று கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் படத்தின் காட்சி என்ன என்பதை விளக்கி கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் வந்து அந்த பாடலில் நடித்து கொடுத்திருக்கிறார். இப்படி அன்பே வா திரைப்படம் முடிவதற்குள்ளேயே எக்கச்சக்கமான பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம்.