40 வருஷத்துக்கு மேல எஸ்.பி முத்துராமன் காப்பாற்றி வைத்திருந்த பொருள்… ரகசியத்திற்கு பின்னால் இருப்பவர் நம்ம எம்.ஜி.ஆர்!.
Actor MGR : தமிழ் சினிமாவில் பெரும் இமயமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி முத்துராமன். சிவாஜி கணேசனையும் எம்.ஜி.ஆரையும் வைத்து இவர் பல படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் பல ஹிட் படங்களாகவும் அமைந்தன.
எம்.ஜி.ஆர் மீது பெரும் மதிப்பு கொண்டவர் எஸ்.பி முத்துராமன். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி கொடுத்த திரைப்படங்களில் அன்பே வா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். வழக்கமாக நாட்டிற்கு நல்லது செய்யும் டெரரான கதாபாத்திரமாக நடித்திருக்கும் எம்.ஜி.ஆர் இந்த திரைப்படத்தில்தான் அப்படி எதுவும் இல்லாமல் ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கும்போது அதில் டெக்னீசியனாக பணிப்புரிந்து வந்தார் முத்துராமன். பொதுவாக எம்.ஜி.ஆரை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் யார் யார் நடிக்க வேண்டும் என அனைத்தையும் எம்.ஜி.ஆர்தான் முடிவு செய்வார்,
ஆனால் இந்த படத்தில் மட்டும் அப்படி அவர் எதுவும் செய்யவில்லை. இயக்குனர் திருலோகசந்தரின் முடிவுக்கே அனைத்தையும் விட்டு விட்டார் எம்.ஜி.ஆர். இப்படி இருக்கும்போது சிம்லாவில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது ஒரு நாள் எஸ்.பி முத்துராமனை சந்தித்த எம்.ஜி.ஆர் படத்தில் பணிப்புரியும் டெக்னீசியன்களின் லிஸ்ட்டை கேட்டார்.
ஒரு வேளை டெக்னீசியன்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா என பயந்த முத்துராமன் இந்த விஷயத்தை தயாரிப்பாளரிடம் கூறினார். உடனே தயாரிப்பாளருக்கும் பயம் இருந்தது. எனவே நமது பெயரை தவிர மற்ற பெயர்களை எழுதி கொடுங்கள் என கூறினார்.
அதை படித்த முத்துராமன் என்ன உங்கள் பெயர் எல்லாம் இல்லை என சரியாக கேட்டுவிட்டார். சரி என்ன தண்டனையாக இருந்தாலும் சேர்ந்தே வாங்குவோம் என லிஸ்ட்டை போட்டு கொடுத்தார் முத்துராமன். அடுத்த நாள் லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கும் பனிக்கால உடைகளை வாங்கி வந்து அன்பளிப்பாக கொடுத்தார் எம்.ஜி.ஆர்
இதற்கா இவ்வளவு பயந்தோம் என நினைத்தார் முத்துராமன். அவர் இறக்கும் வரையில் ஒரு புதையல் போல அந்த குளிர்கால உடைகளை பேணி காத்து வந்தாராம் எஸ்.பி முத்துராமன்.