Tag Archives: ஆண் பாவம்

நான் ரொம்ப ஆடிப்போன காட்சி அது.. விஜய் சேதுபதியை பிரமிக்க வைத்த திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர்களில் மிக முக்கியமான நபர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் படங்களை பொருத்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக கதாநாயகனின் கதாபாத்திரம் இருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர் பார்த்து வியந்த படங்கள் குறித்து அடிக்கடி பேட்டிகளில் கூறுவது உண்டு. அப்படியாக இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான ஆண்பாவம் திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் விஜய் சேதுபதி கூறும் பொழுது ஆண்பாவம் திரைப்படத்தில் பெண்பார்க்கும் காட்சி ஒன்று வரும். அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி முதலில் நடிகர் பாண்டியன் அவரது உயரத்தை சுவற்றில் நின்று அளந்து விட்டு செல்வார்.

அதற்குப் பிறகு சீதா வந்து அளக்கும் பொழுது அவரது காலை எக்கி நிற்பது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டு இருக்கும். மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது என்பதை வசனத்தின் வழியாக சொல்லாமல் ஒரு காட்சியிலேயே காட்டிவிடுவார் பாண்டியராஜன். எப்படி அவ்வளவு எளிமையாக ஒரு காதலை அவரால் காட்ட முடிந்தது என்று அவரிடம் நான் பலமுறை கேட்டிருக்கிறேன் என்று அந்த காட்சி குறித்து பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.

ஒரே நைட்டில் படமாக்கப்பட்ட பாடல்!.. என்னை ஹீரோவாக்குனது அந்த பாட்டுதான்!.. மனம் திறந்த பாண்டியராஜன்!.

திரை இசை கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு அப்போது பெரும் மதிப்பு இருந்தது. இளையராஜா இசையமைத்தால் அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

நடிகர் ராஜ்கிரண் அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் கதாநாயகனின் புகைப்படத்தை விடவும் இளையராஜாவின் புகைப்படத்தைதான் பெரிதாக போஸ்டர்களில் வைப்பாராம். அந்த அளவிற்கு இளையராஜா இசைக்கு அதிக முக்கியத்துவம் இருந்தப்போதும் கூட அவர் நிறைய இயக்குனர்களுக்கு உதவி செய்துள்ளார்.

ilayaraja

அறிமுக இயக்குனர்கள் பலரது திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெறுவதற்கு இளையராஜா உதவியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜனுக்கும் ஆண் பாவம் திரைப்படம் பெரும் வெற்றியை பெறுவதற்கு இளையராஜா உதவியுள்ளார்.

அதுக்குறித்து பாண்டியராஜன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது ஆண் பாவம் படத்தில் ஒரு காட்சியில் ஜனகராஜின் மகன் தலையில் பித்தளை குடம் மாட்டிக்கொள்ளும். அப்போது அந்த பித்தளை குடத்தை தட்டிக்கொண்டே பாண்டியராஜன் பாடுவது போன்ற ஒரு பாட்டு வைப்பதற்கு திட்டமிடப்பட்டது.

உதவிய இளையராஜா:

படம் முழுவதையும் படமாக்கப்பட்ட பிறகுதான் தனியாக பாடல்களை படமாக்கினர். இதனால் மொத்த படத்தையும் இளையராஜா ஏற்கனவே பார்த்திருந்தார். இந்த நிலையில் பாண்டியராஜன் இசையமைக்க சொல்லும்போது அந்த ஒரு பாட்டை மட்டும் மறந்துவிட்டார்.

இதனை அடுத்து அதை சரியாக நியாபகம் வைத்திருந்த இளையராஜா அந்த ஒரு பாட்டை மறந்துவிட்டாயே என கூறி காதல் கசக்குதய்யா பாடலுக்கு இசையை அமைத்து அவரே பாடியும் கொடுத்தார். ஆனால் அப்போது படத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்ததால் பட செட்டுகள் வரை பிரிக்கப்பட்டு விட்டன.

இதனை பார்த்த பாண்டியராஜன் குரூப் டான்ஸர்களை அழைத்தார். அதில் ஆண்கள் மட்டுமே இருந்தனர். பெண்கள் எல்லாம் ஏற்கனவே வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் செட்டில் இருந்த ஸ்பாட் லைட்டுகளை மட்டும் பயன்படுத்தி காதல் கசக்குதய்யா பாடலை எடுத்து முடித்தார் பாண்டியராஜன்.

அந்த படத்துலேயே அந்த பாடல்தான் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே நான் கதாநாயகனாக முக்கிய காரணமே இளையராஜாதான் என கூறுகிறார் பாண்டியராஜன்.