Tag Archives: ஆனந்தராஜ்

மனகஷ்டத்தால் அந்த விஜய் படத்தை பார்க்கலை.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகர் ஆனந்தராஜ்.!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஆனந்தராஜ். சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் அதிக வரவேற்பை பெற்று வரும் காலகட்டங்களில் அவர்கள் அனைவருடனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ்.

ஒரு கட்டத்திற்கு பிறகு ஆனந்தராஜ் காமெடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். இப்பொழுதெல்லாம் அவர் காமெடியாக நடிக்கும் படங்கள் கதாபாத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் திகில் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்த ஒரு பேட்டியில் பேசியிருப்பார் ஆனந்தராஜ். அதில் அவர் கூறும் பொழுது பிகில் திரைப்படத்தை நான் இன்று வரை பார்க்கவே இல்லை.

ஏனெனில் அந்த திரைப்படத்தில் எனக்கு வைத்திருந்த அறிமுகம் காட்சியை நீக்கிவிட்டனர். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்பொழுதுமே எல்லா திரைப்படத்திலும் எனக்கான அறிமுக காட்சி என்பது நீக்கப்பட்டது கிடையாது.

ஆனால் இந்த படத்தில் அது நீக்கப்பட்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார் ஆனந்தராஜ்.

என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..

Anandharaj: கோலிவுட் வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் ஆனந்தராஜ். ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பொழுது அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாகவே இருந்தன.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார் ஆனந்தராஜ். ஒரு காலகட்டங்களில் அவர் திரையில் தோன்றினாலே பலருக்கும் பயம் வரும் அளவிற்கு கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ்.

சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர துவங்கிய பிறகு ஆனந்தராஜிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வாய்ப்புகளை இழந்தார். பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் பொழுது காமெடி நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஆனந்தராஜ்.

காமெடியனாக களம் இறங்கிய வில்லன்:

அதற்கு முந்தைய தலைமுறையினர்கள் பார்த்து மிரண்டுப்போன ஒரு நடிகரை தற்சமயம் இருக்கும் 2கே கிட்ஸ் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுதான் நடிகர் ஆனந்தராஜ். இப்படியாக எந்த ஒரு நடிப்பையும் சிறப்பாக நடிக்க கூடியவராக ஆனந்தராஜ் இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மணிரத்தினம் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோனது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பகல் நிலவு என்கிற திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நண்பன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆனந்தராஜுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நிறத்தால் போன வாய்ப்பு:

அப்போது படத்திற்கு எப்படி எல்லாம் லைட்டிங் வைக்க வேண்டும் என்று மணிரத்தினம் யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் ஆனந்தராஜின் நிறத்தை பார்த்திருக்கிறார். அப்போது முதலே ஆனந்தராஜ் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பார்.

இதனை பார்த்த மணிரத்தினம் படத்தின் கதாநாயகன் கருப்பாக இருக்கிறார் அவரது நண்பன் வெள்ளையாக இருக்கிறார் நாம் எப்படி லைட் வைத்தாலும் முரளியை விட ஆனந்தராஜ் தானே நன்றாக தெரிவார் என்று கேட்டிருக்கிறார்.

அதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து ஆனந்தராஜை நீக்கிவிட்டனர் அந்த படத்தில் மட்டும் நண்பனாக நடித்திருந்தால் தொடர்ந்து வில்லனாக நடிக்காமல் வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார் ஆனந்தராஜ் ஆனால் அவரது வெள்ளை நிறத்தின் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது.

கார்த்தி படத்தில் எம்.ஜி.ஆர் வரார்!.. படக்குழு செய்த தரமான சம்பவம்!..

எத்தனை வருடங்கள் ஆனாலும் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் மார்க்கெட்டை யாராலும் காலி செய்ய முடியாது என கூறலாம் அந்த அளவிற்கு எப்போதுமே பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார்.

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் மக்களின் நாயகனாக இருந்ததால் அவருக்கான வரவேற்பு குறையாமலே இருக்கிறது. எனவே எப்போது எம்.ஜி.ஆர் திரையில் தோன்றினாலும் அந்த காட்சிக்கு விசில் அடிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருப்பார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரை வைத்தே ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறார்கள். வா வாத்தியாரே என்னும் இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை காட்ட போகிறார்களாம். படத்தின் கதைப்படி ராஜ்கிரண் ஒரு பெரும் எம்.ஜி.ஆர் ரசிகர்.

அவர் தனது பேரன் கார்த்தி எம்.ஜி.ஆர் போலவே வர வேண்டும் என எம்.ஜி.ஆர் படங்களாக போட்டு காட்டுகிறார். ஆனால் அதில் வரும் நம்பியாரை மட்டும் பார்த்த கார்த்தி ஒரு திருடனாக மாறுகிறார். அதன் பிறகு அந்நியன் படத்தில் வருவது போல அவருக்குள்ளேயே எம்.ஜி.ஆரின் கதாபாத்திரமும் இருக்கிறது.

இதனால் சமயத்தில் எம்.ஜி.ஆராக மாறிவிடுவார் கார்த்தி. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் உண்மையில் வருவது போல காட்சி இருக்கிறதாம். இந்த காட்சிக்காக நடிகர் ஆனந்த ராஜிற்கு எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுள்ளனர். அந்த வேஷத்தில் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நிஜமாகவே எம்.ஜி.ஆர் போல் இருக்கிறாராம் ஆனந்த ராஜ்.

இந்த நிலையில் இந்த சம்பவம் படம் குறித்த வரவேற்பை அதிகரித்துள்ளது.