Tag Archives: இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்

முதல் படத்திலேயே தேசிய விருது பெற இருக்கும் இயக்குனர்கள்..! யார் யார் தெரியுமா?

இப்பொழுது புது படங்களை இயக்கும் அறிமுக இயக்குனர்களின் வருகை என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. பழம்பெரும் இயக்குனர்கள் பலர் இருந்தாலும் கூட குறைந்த பட்ஜெட்டில் பெரிய திரைப்படங்களை எடுக்கும் திறமை புது இயக்குனர்களுக்கு தான் இருக்கிறது.

அப்படியாக வருடத்திற்கு ஒரு ஐந்து அல்லது ஆறு திரைப்படங்களாவது ஹிட் படங்களாக இவர்களுக்கு அமைந்து விடுகின்றன. இந்த நிலையில் தேசிய விருதுகளை பெறுவதிலும் இப்பொழுது அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு இடம் கிடைக்க துவங்கியிருக்கிறது.

அந்த வகையில் இந்த வருடம் தேசிய விருது பெரும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளில் இரண்டு புது இயக்குனர்களின் பெயர்கள் சேர்ந்து இருக்கின்றன.

போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா மற்றும் பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனரான  ராம்குமார் பாலகிருஷ்ணன் இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைக்க இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

ஒரே படத்தில் ஓஹோன்னு வந்த பார்க்கிங் இயக்குனர்!. லைனில் நிற்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி கடந்த டிசம்பரில் வெளியான திரைப்படம் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் ஹரிஸ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஒரு வீட்டில் காரை பார்க் செய்வதில் ஆரம்பிக்கும் பிரச்சனையை வைத்து கூட இப்படி ஒரு கதையை எடுக்க முடியுமா? என வியக்க வைத்திருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த திரைப்படம் மொத்தமே 5.50 கோடி பட்ஜெட்டில்தான் படமாக்கப்பட்டது.

parking

ஆனால் படம் வெளியாகும் முன்பே ஓ.டி.டி, சாட்டிலைட் என 13 கோடிக்கு விற்பனையானது. இது இல்லாமல் திரையில் வெளியாகி 17 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் இந்த படத்தை மற்ற மொழியில் ரீமேக் செய்ய உள்ளனராம். ஐந்துக்கும் அதிகமான மொழிகளில் இதற்காக காப்புரிமை கேட்டு வருகிறார்களாம்.

இந்த நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி மாதிரியான முன்னணி நடிகர்கள் எல்லாம் அவரது திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் முதலில் கதையை எழுதிவிட்டு பிறகு சொல்கிறேன் என கூறிவிட்டாராம் இயக்குனர்.