Tag Archives: por thozhil

போர் தொழில் இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம்.. இதுதான் கதை..!

தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

அந்த வகையில் தற்சமயம் போர்த்தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

போர் தொழில் திரைப்படம் மூலமாக விக்னேஷ் ராஜாவிற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கும் திரைப்படம் சமூக அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக இந்த தனுஷ் திரைப்படமானது ராமநாதபுரம் பகுதியில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாதிய அடக்குமுறை அதிகமாக உள்ள காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை அமைப்பை இந்த படம் கொண்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

மேலும் கலப்பு திருமணத்தை முக்கிய கதைகளமாக கொண்டுதான் இந்த படத்தின் கதை நகர இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எனவே மக்கள் மத்தியில் கவனம் பெரும் ஒரு படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் படத்திலேயே தேசிய விருது பெற இருக்கும் இயக்குனர்கள்..! யார் யார் தெரியுமா?

இப்பொழுது புது படங்களை இயக்கும் அறிமுக இயக்குனர்களின் வருகை என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. பழம்பெரும் இயக்குனர்கள் பலர் இருந்தாலும் கூட குறைந்த பட்ஜெட்டில் பெரிய திரைப்படங்களை எடுக்கும் திறமை புது இயக்குனர்களுக்கு தான் இருக்கிறது.

அப்படியாக வருடத்திற்கு ஒரு ஐந்து அல்லது ஆறு திரைப்படங்களாவது ஹிட் படங்களாக இவர்களுக்கு அமைந்து விடுகின்றன. இந்த நிலையில் தேசிய விருதுகளை பெறுவதிலும் இப்பொழுது அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு இடம் கிடைக்க துவங்கியிருக்கிறது.

அந்த வகையில் இந்த வருடம் தேசிய விருது பெரும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளில் இரண்டு புது இயக்குனர்களின் பெயர்கள் சேர்ந்து இருக்கின்றன.

போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா மற்றும் பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனரான  ராம்குமார் பாலகிருஷ்ணன் இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைக்க இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

2023 ல் வெற்றி படங்கள் கொடுத்த 10 அறிமுக இயக்குனர்கள்!..

Tamil cinema Directors : தமிழ் சினிமாவில் முன்பை விட இப்போதெல்லாம் அறிமுக இயக்குனர்கள் அதிகமாக வரத் துவங்கி இருக்கின்றனர் முன்பெல்லாம் ஒரு புது இயக்குனருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது சாதாரண விஷயமாக இருக்காது.

அதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும் ஆனால் இப்பொழுது திரைப்படத்தின் வர்த்தகம் என்பது பெருமளவில் மாறுபட்டு இருக்கிறது நிறைய கோடிகள் செலவு செய்தால்தான் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்க முடியும் என்கிற நிலை வந்துள்ளது.

இந்த நிலையில் சின்ன தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் குறைந்த பட்ஜெட் படங்களை எடுப்பதற்கு அறிமுக இயக்குனர்கள் தயாராக இருக்கின்றனர். அதனை தாண்டி அறிமுக இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்கள் பெருமளவில் வெற்றியை காணும் பொழுது அது குறைந்த பட்ஜெட்டை போட்ட தயாரிப்பாளருக்கும் நல்ல வசூலை கொடுக்கிறது.

முக்கியமாக முதல் படம் என்பதால் அதிகபட்ச இயக்குனர்கள் தங்களுடைய முழு உழைப்பையும் போட்டு அந்த திரைப்படத்தை சிறப்பான படமாக எடுக்கவே முயற்சி செய்கின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் இந்த வருடம் புதுமுக இயக்குனர்களின் பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றுள்ளன. அப்படி வெற்றி பெற்ற டாப் 10 படங்களை தான் தற்சமயம் பார்க்க போகிறோம்.

01.பார்க்கிங் – ராம்குமார் பாலகிருஷ்ணன்

parking

02.போர்தொழில் – விக்னேஷ் ராஜா

03.யாத்திசை – தரணி ராசேந்திரன்

yaathisai

04.அயோத்தி – ஆர். மந்திர மூர்த்தி

05.குட்நைட் – வினாயக் சந்திரசேகரன்

06.டாடா – கணேஷ் கே பாபு

07.டிடி ரிட்டன்ஸ் – எஸ்.பிரேம் ஆனந்த்

08.கிடா – ஆர்.வெங்கட்

kida

09.ஜோ – எஸ்.ஹரிஹரன் ராம்

10.கண்ணகி – யஷ்வந்த் கிஷோர்

போர் தொழில் படத்துல அந்த சீன் வேட்டையாடு விளையாடுல இருந்து காபி அடிச்சது!..

சில திரைப்படங்கள் சினிமாவில் வெளியாகி சில நாட்கள் கழித்தே பிரபலமாகும். அப்படி தமிழ் சினிமாவில் சில நாட்களுக்கு முன்பு பிரபலமான திரைப்படம்தான் போர் தொழில். போர் தொழில் திரைப்படமானது வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்த திரைப்படத்திற்கு அதிக விளம்பரம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் படம் வெளியாகி சிறிது நாட்களிலேயே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பலரும் இந்த படத்தை பார்க்க துவங்கினர்.

இந்த படம் குறித்து விக்னேஷ் ராஜா கூறும்போது தனக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்த படம் வேட்டையாடு விளையாடு என கூறியிருந்தார். அதே போல வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போலவே போர் தொழில் திரைப்படத்திலும் காட்சிகள் வைத்திருந்தார்.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு காட்சியில் வில்லன் கமல்ஹாசனை சுடுவதற்கு முயற்சிப்பார். அப்போது அந்த துப்பாக்கி வேலை செய்யாது. உடனே கமல்ஹாசன் துப்பாக்கியை கொடு நான் சுடுவதற்கு சொல்லி தரேன் என கூறுவார்.

அதே போல போர் தொழில் திரைப்படத்திலும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் வில்லனுக்கு துப்பாக்கியை வைத்து சுட தெரியாது. அதை ஹீரோ மீது தூக்கி எறிவான். அதை கைப்பற்றிய ஹீரோ அதை சரி செய்து சுடுவான். அந்த காட்சி வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இன்ஸ்பேர் ஆனது என இயக்குனர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.