தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
அந்த வகையில் தற்சமயம் போர்த்தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
போர் தொழில் திரைப்படம் மூலமாக விக்னேஷ் ராஜாவிற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கும் திரைப்படம் சமூக அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக இந்த தனுஷ் திரைப்படமானது ராமநாதபுரம் பகுதியில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாதிய அடக்குமுறை அதிகமாக உள்ள காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை அமைப்பை இந்த படம் கொண்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
மேலும் கலப்பு திருமணத்தை முக்கிய கதைகளமாக கொண்டுதான் இந்த படத்தின் கதை நகர இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எனவே மக்கள் மத்தியில் கவனம் பெரும் ஒரு படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பொழுது புது படங்களை இயக்கும் அறிமுக இயக்குனர்களின் வருகை என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. பழம்பெரும் இயக்குனர்கள் பலர் இருந்தாலும் கூட குறைந்த பட்ஜெட்டில் பெரிய திரைப்படங்களை எடுக்கும் திறமை புது இயக்குனர்களுக்கு தான் இருக்கிறது.
அப்படியாக வருடத்திற்கு ஒரு ஐந்து அல்லது ஆறு திரைப்படங்களாவது ஹிட் படங்களாக இவர்களுக்கு அமைந்து விடுகின்றன. இந்த நிலையில் தேசிய விருதுகளை பெறுவதிலும் இப்பொழுது அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு இடம் கிடைக்க துவங்கியிருக்கிறது.
அந்த வகையில் இந்த வருடம் தேசிய விருது பெரும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளில் இரண்டு புது இயக்குனர்களின் பெயர்கள் சேர்ந்து இருக்கின்றன.
போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா மற்றும் பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைக்க இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
சில திரைப்படங்கள் சினிமாவில் வெளியாகி சில நாட்கள் கழித்தே பிரபலமாகும். அப்படி தமிழ் சினிமாவில் சில நாட்களுக்கு முன்பு பிரபலமான திரைப்படம்தான் போர் தொழில். போர் தொழில் திரைப்படமானது வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இந்த திரைப்படத்திற்கு அதிக விளம்பரம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் படம் வெளியாகி சிறிது நாட்களிலேயே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பலரும் இந்த படத்தை பார்க்க துவங்கினர்.
இந்த படம் குறித்து விக்னேஷ் ராஜா கூறும்போது தனக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்த படம் வேட்டையாடு விளையாடு என கூறியிருந்தார். அதே போல வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போலவே போர் தொழில் திரைப்படத்திலும் காட்சிகள் வைத்திருந்தார்.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு காட்சியில் வில்லன் கமல்ஹாசனை சுடுவதற்கு முயற்சிப்பார். அப்போது அந்த துப்பாக்கி வேலை செய்யாது. உடனே கமல்ஹாசன் துப்பாக்கியை கொடு நான் சுடுவதற்கு சொல்லி தரேன் என கூறுவார்.
அதே போல போர் தொழில் திரைப்படத்திலும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் வில்லனுக்கு துப்பாக்கியை வைத்து சுட தெரியாது. அதை ஹீரோ மீது தூக்கி எறிவான். அதை கைப்பற்றிய ஹீரோ அதை சரி செய்து சுடுவான். அந்த காட்சி வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இன்ஸ்பேர் ஆனது என இயக்குனர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips