Tag Archives: எம்.எஸ் பாஸ்கர்

தமிழில் தேசிய விருதை பெற்ற இரண்டு முக்கிய நடிகர்கள்.. இப்பவாச்சும் கொடுத்தாங்களே..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும் நடிகர்களின் நடிப்புக்கு எப்போதுமே அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைவது கிடையாது.

இந்த மாதிரி பெரிதாக நடிக்க தெரியாமல் அதே சமயம் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

பெரிதாக துணை கதாபாத்திரமாக வருபவர்களை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம். ஆனால் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும்போது அவர்களும் கூட தனித்துவமாக தெரிய துவங்குவார்கள். அந்த வகையில் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் தெரிந்தவர்தான் நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.

துணை கதாபாத்திரமாக நடித்த இவருக்கு எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை விட அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் பார்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

அதே மாதிரி பாக்கியராஜ் காலத்தில் இருந்தே நடித்து வருபவர் நடிகை ஊர்வசி. இவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு Ullozhukku என்கிற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

அந்த இயக்குனரை நான் பார்த்தே ஆகணும்.. இயக்குனரை ஆள் வைத்து தேடிய ரஜினிகாந்த்!.. என்ன விஷயம்?.

Actor Rajinikanth : பெரும் நடிகராக இருந்தாலும் கூட ரஜினிகாந்திடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால் சின்ன சின்ன பிரபலங்களை அழைத்து பாராட்டுவது அவரது வழக்கமாகும்.

ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்த்து அந்த திரைப்படம் சிறப்பாக இருந்தது என்றால் அவர்களை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் கூட லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தபோது பிரதீப் ரங்கநாதனை அழைத்து அவருக்கு மரியாதை செய்து இருந்தார் ரஜினிகாந்த்.

rajinikanth

அதே போல நடிகர் எம் எஸ் பாஸ்கர் மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் ரஜினிகாந்த். எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு ரஜினிகாந்திற்கு மிகவும் பிடிக்கும் என கூறலாம். இது குறித்து எம்.எஸ் பாஸ்கர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது குரு என் ஆளு என்கிற திரைப்படத்தில் ஒரு கூடை சன் லைட் என்கிற ரஜினிகாந்தின் பாடலை வைத்து விவேக்கும் எம்.எஸ் பாஸ்கரும் ஒரு பாடல் செய்திருப்பார்கள்.

போன் செய்து வாழ்த்திய ரஜினிகாந்த்:

அதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ரஜினிகாந்த் எம்.எஸ் பாஸ்கருக்கு போன் செய்து அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்தது என்று கூறியிருக்கிறார். அதேபோல எட்டு தோட்டாக்கள் திரைப்படம் வெளியான பொழுது அதை பார்த்த ரஜினி எம்.எஸ் பாஸ்கருக்கு போன் செய்து எவ்வளவு சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்று அவரை பாராட்டி இருக்கிறார்.

மேலும் அந்த படத்தின் இயக்குனரிடம் கண்டிப்பாக நான் பேசிய ஆக வேண்டும். வெகு நாட்களாக அவரது நம்பரை பலரிடம் கேட்டு வந்தேன் ஆனால் யாரும் கொடுக்கவில்லை என்று ரஜினி கூறவே எம்.எஸ் பாஸ்கர் அவரது நம்பரை வழங்கி உள்ளார். பிறகு அவருக்கும் அழைப்பு விடுத்து வாழ்த்தியிருக்கிறார் ரஜினிகாந்த் இந்த சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் எம்.எஸ் பாஸ்கர்.

எல்லார் வாழ்க்கையிலும் நடந்த சம்பவம்தான்!.. பார்க்கிங் பட விமர்சனம்!..

Tamil movie parking Review : இன்று வெளியான திரைப்படங்களில் மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பை பெற்றா திரைப்படமாக பார்க்கிங் திரைப்படம் இருக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் என்கிற இயக்குனர் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஹரிஸ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைப்படி இரண்டு வீடுகளை கொண்ட ஒரு குடியிருப்பு இருக்கிறது. அதில் கீழ்த்தளத்தில் நேர்மையான அரசு அதிகாரியான எம்.எஸ் பாஸ்கர் பல வருடங்களாக குடியிருக்கிறார். இந்த நிலையில் மேல் தளத்திற்கு புதிதாக ஹரிஸ் கல்யாண் அவருடைய கர்ப்பிணி மனைவியுடன் குடி வருகிறார்.

ஆரம்பத்தில் இருவருமே பைக் வண்டியைதான் வைத்துள்ளனர். ஆனால் பிரசவ காலத்தில் இருக்கும் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது பைக்கை விற்றுவிட்டு ஒரு காரை வாங்குகிறார் ஹரிஸ் கல்யாண். அந்த குடியிருப்பில் ஒரே ஒரு கார் பார்க்கிங்தான் இருக்கிறது.

அந்த கார் பார்க்கிங்கில் ஹரிஸ் கல்யாண் தனது காரை நிறுத்துவதால் எம்.எஸ் பாஸ்கருக்கு தனது பைக்கை நிறுத்துவது சிரமமாகிறது. இந்த நிலையில் ஒரு நாள் தனது பைக்கை தெரியாமல் அந்த காரில் உரசி விடுகிறார் எம்.எஸ் பாஸ்கர்.

இதனால் இருவருக்குமிடையே துவங்கும் சண்டை விஸ்வரூபம் எடுக்கிறது. அதன் முடிவு என்னவாக இருக்கிறது என்பதே கதை. ஊர் உலகம் முழுக்க பலரும் கதையை தேடும்போது வீட்டின் வாசலிலேயே கதையை தேடியுள்ளார் படத்தின் இயக்குனர்.

பலரது வீட்டிலும் சென்னையில் அன்றாடம் இந்த பார்க்கிங் பிரச்சனை இருக்கும். அதை ஒரு இரண்டு மணி நேர சுவாரஸ்ய கதையாக்கியதன் மூலம் முதல் காட்சியிலேயே வரவேற்பை பெற்றுள்ளார் இயக்குனர். வழக்கமான படங்களில் இருக்கும் தேவையில்லாத பாடல்களோ பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகளோ இல்லாமல், நிஜ வாழ்வின் பார்வையில் இருந்தே படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.

இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்த படங்களில் கண்டிப்பாக பார்க்கிங் படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் நடிச்சிட்டு இருக்கேன்! – நீ சிரிக்கிற! – அருள்நிதிக்கும் எம்.எஸ் பாஸ்கருக்கும் நடந்த பஞ்சாயத்து!

தமிழ் சினிமாவில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.எஸ் பாஸ்கர். ஒரு காட்சிக்கு அவர் வந்தாலும் கூட அந்த காட்சியில் சிறப்பான தனது நடிப்பை காட்டி தனியாக ஒரு இடத்தை பிடித்துவிடுவார்.

இதனாலேயே பெரிதாக நடிப்பு வராத நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் எம்.எஸ் பாஸ்கரை நடிக்க விட மாட்டார்கள். டிமாண்டி காலணி படத்தில் ஜோசியம் கூறும் ஜோசியராக நடித்திருந்தார் எம்.எஸ் பாஸ்கர்.

அந்த படம் வெளியான பிறகு படத்தில் அந்த காமெடி காட்சி மிகவும் ட்ரெண்ட் ஆனது. அந்த காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது எம்.எஸ் பாஸ்கரை நடிப்பை கண்டு கதாநாயகன் அருள்நிதிக்கே சிரிப்பு வந்துவிட்டது.

முதல் டேக்கிலையே முடிய வேண்டிய காட்சி அருள்நிதி சிரித்ததால் மீண்டும் படமாக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் “ஏண்டா எவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருக்கேன்” நீ சிரிச்சுட்டு இருக்க என அருள்நிதியிடம் வந்து கேட்டார் எம்.எஸ் பாஸ்கர்.

சார் உங்க நடிப்பு அவ்வளவு அபாரமா இருந்தது சார். அதுனால என்னால சிரிப்பை அடக்க முடியல. சாரி சார் என கூறியுள்ளார் அருள்நிதி. இதையடுத்து சமாதனமாகியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர். அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை தரக்கூடியவர் எம்.எஸ் பாஸ்கர் என ஒரு பேட்டியில் அருள்நிதி கூறியுள்ளார்.